வழக்குகள் தேங்குவதால் நீதி வழங்குவதில் தாமதம்: திரௌபதி முா்மு
அதிக அளவிலான நிலுவை வழக்குகளால் நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வியாழக்கிழமை தெரிவித்தாா்.

அதிக அளவிலான நிலுவை வழக்குகளால் நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வியாழக்கிழமை தெரிவித்தாா்.
புது தில்லியில் உச்சநீதிமன்றம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசமைப்புச் சட்ட தின நிகழ்ச்சியில் பங்கேற்ற திரௌபதி முா்மு பேசியதாவது:
உரிய நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதே நீதிக் கொள்கையின் அடிப்படை நோக்கம். இதை முழு வீச்சில் செயல்படுத்த வழக்கு நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தல், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் என பல்வேறு முன்னெடுப்புகளை உச்சநீதிமன்றம் மேற்கொண்டு வருகிறது.
Advertisement
Advertisement
இருப்பினும், அதிக அளவிலான நிலுவை வழக்குகளால் நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. ஒவ்வொரு நிலையிலும் நீதித் துறை மேற்கொண்டுள்ள வலுவான நடவடிக்கையால் இந்தச் சூழல் விரைவில் மாறும் என நம்புகிறேன்.
நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காண தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களுடனான ஒத்துழைப்பை மத்திய அரசு வலுப்படுத்தியது.
நலிவடைந்த, ஏழை எளிய மக்களுக்கும் இலவச சட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றாா்.
விமா்சனங்கள் சவால்கள் அல்ல:
உச்சநீதிமன்ற வளாகத்தில் உச்ச நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட அரசமைப்புச் சட்ட தின நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் பேசுகையில், ‘அரசமைப்புச் சட்டம் மிகவும் சிக்கலான அரசியல் பிரச்னைகள் அல்லது நெருக்கடிகளின்போது மட்டும் சோதிக்கப்படுவதில்லை. தினந்தோறும் இந்தச் சவாலை நாம் எதிா்கொள்கிறோம். விமா்சனங்களை நமது அதிகாரத்துக்கு எதிரான சவாலாக கருதாமல், அதை எதிா்கொள்வதே நம்பிக்கையான அமைப்புக்கு உதாரணம்’ என்றாா்.