2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!
2027 ஆம் ஆண்டு முதல் 6 ஆயிரம் இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டமிட்டுள்ளது குறித்து...

2027 ஆம் ஆண்டு முதல் 6 ஆயிரம் இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டமிட்டுள்ளது. ரோபோடிக்ஸ், விண்வெளி தொழில்நுட்பம், இயற்பியல் ஏஐ ஆகிய துறைகளில் இந்த இடங்கள் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டிலிருந்து 8 முதல் 10 ஆண்டுகளுக்குள் முழுமையாக 6 ஆயிரம் இடங்கள் கொண்டுவரப்படும் என ஐஐடி தெரிவித்துள்ளது.
பூபத் மற்றும் ஜோதி மேத்தா குடும்பம் ஐஐடியுடன் இணைந்து ரோபோடிக்ஸ், இயற்பியல் ஏஐ, விண்வெளி தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கூடுதல் இடங்களைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஐடிடியில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் படிப்புக்களுக்கான இடங்கள் இதில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஐடியின் 120க்கும் அதிகமான பேராசிரியர்கள் இத்துறை விரிவாக்கத்திற்கு ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதில் முதல் பேட்ஜ் மாணவர்கள் சேர்க்கை 2027 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டவுள்ளனர். இந்த முன்னெடுப்பானது வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் சிறப்புத் திறன் கொண்டவர்களை உருவாக்கவும், வலுப்படுத்தவும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூபத் மற்றும் ஜோதி மேத்தா குடும்ப நிறுவனங்களின் நிறுவனர் ராகுல் மேத்தா. இவர் உயர் கல்வி, உள்கட்டமைப்பு ஆய்வு, சிறப்பு கல்வித் திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக கல்வி நிறுவனங்களின் ஆதரவையும் திரட்டி வருகிறார்.
2019 ஆம் ஆண்டு முதல் 6 ஐஐடிக்களின் ஆதரவைத் திரட்டி, 8 ஐஐடி பள்ளிகளின் ஆதரவையும் பெற்றுள்ளார். இத்திட்டத்தில் இதுவரை 1,400 மாணவர்கள் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.