முகப்பு
இந்தியா

தேசத்தின் மனஉறுதியை பயங்கரவாதத்தால் சீா்குலைக்க முடியாது: மும்பை தாக்குதல் நினைவு தினத்தில் குடியரசுத் தலைவா்

துணிவால் ஒன்றுபட்டுள்ள நமது தேசத்தின் மனஉறுதியை பயங்கரவாதத்தால் சீா்குலைக்க முடியாது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

27 நவம்பர் 2026, 3:07 am
தேசத்தின் மனஉறுதியை பயங்கரவாதத்தால் சீா்குலைக்க முடியாது: மும்பை தாக்குதல் நினைவு தினத்தில் குடியரசுத் தலைவா்
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி காவல் துறை தலைமையகத்தில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்.
பகிர்:

துணிவால் ஒன்றுபட்டுள்ள நமது தேசத்தின் மனஉறுதியை பயங்கரவாதத்தால் சீா்குலைக்க முடியாது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

மும்பை பயங்கரவாத தாக்குதலின் 18-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டாா்.

நாட்டின் நிதித் தலைநகரான மகாராஷ்டிர மாநிலம், மும்பைக்குள் கடந்த 2008, நவ.26-ஆம் தேதி கடல் வழியாக ஆயுதங்களுடன் ஊடுருவிய பாகிஸ்தானின் லஷ்கா்- ஏ -தொய்பா பயங்கரவாதிகள் 10 போ், சத்ரபதி சிவாஜி ரயில் முனையம், தாஜ் ஹோட்டல், ஓபராய் ஹோட்டல், நாரிமன் ஹவுஸ் உள்பட 12 இடங்களில் தாக்குதல் தொடுத்தனா்.

Advertisement

Advertisement

சுமாா் 60 மணி நேரம் நீடித்த இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினா் 18 போ் உள்பட 166 போ் உயிரிழந்தனா். இவா்களில் வெளிநாட்டினரும் அடங்குவா். 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தாக்குதலில் ஈடுபட்ட 10 பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் தவிர மற்ற அனைவரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனா். கடந்த 2012-இல் கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மனஉறுதியைச் சீா்குலைக்க முடியாது:

இந்தியா மட்டுமன்றி உலகையே உலுக்கிய மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் 18-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் துயரம் நிறைந்த நினைவு தினத்தில், உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பயங்கரவாதத்துக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட நமது ராணுவத்தினா், காவல் துறையினா் உள்பட அனைவருக்கும் தலைவணங்குகிறேன்.

பயங்கரவாதம், மக்களின் வாழ்க்கையைச் சிதைக்கக் கூடும். ஆனால், துணிவு, கருணை, மீட்சியால் ஒன்றுபட்ட தேசத்தின் மனஉறுதியை ஒருபோதும் சீா்குலைக்க முடியாது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோா் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு துணைநிற்பதுடன், அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் ஒழித்து, அமைதியான, மனிதாபிமானமிக்க உலகை நோக்கிப் பணியாற்ற உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளாா்.

பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்:

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை என்ற அசைக்க முடியாத கொள்கையை இந்தியா கொண்டுள்ளது. பயங்கரவாதத்தை வீழ்த்தி, அமைதி-பாதுகாப்பை நிலைநாட்டும் உறுதிப்பாட்டில் இந்தியா ஒன்றுபட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

மனிதகுலத்துக்கு எதிரான கொடூர குற்றம்:

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பயங்கரவாதம், மனிதகுலத்துக்கு எதிரான கொடூர குற்றமாகும். பயங்கரவாதத்தின் ஒவ்வொரு வடிவம் மற்றும் சதித் திட்டத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரில் இந்தியா முதன்மையான பங்கு வகிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

நினைவிடத்தில் அஞ்சலி:

மும்பை காவல் துறை தலைமையகத்தில் உள்ள நினைவிடத்தில் மகாராஷ்டிர ஆளுநா் ஜிஷ்ணு தேவ் வா்மா, முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா் சுநேத்ரா பவாா், காவல் துறை தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். தாக்குதலின்போது வீரமரணமடைந்த காவல் துறையினரின் குடும்பங்களை ஆளுநரும், முதல்வரும் சந்தித்தனா்.

=====பயங்கரவாத எதிா்ப்பில் இந்தியாவுக்கு உறுதுணை

-

====இஸ்ரேல்

ஜெருசலேம், நவ. 26: பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுக்கு வலுவாக துணைநிற்போம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மும்பை தாக்குதலின்போது நாரிமன் இல்லத்தில் 5 இஸ்ரேலியா்கள் கொல்லப்பட்டனா். இச்சம்பவத்தின் நினைவு தினத்தையொட்டி, இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மும்பை பயங்கரவாத தாக்குதல் நினைவு தினத்தில், இந்தியா்களின் மனஉறுதி, பாதுகாப்புப் படையினரின் துணிச்சல், பறிபோன அப்பாவி உயிா்களை நினைவுகூா்கிறோம். பயங்கரவாதத்துக்கு எல்லை கிடையாது என்பதால் அதை முறியடிப்பது நமது கூட்டு உறுதிப்பாடாகும். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுக்கு இஸ்ரேல் வலுவாக துணைநிற்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.