முகப்பு
இந்தியா

5-ஆவது காசி தமிழ் சங்கமம் விழா: சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கிவைக்கிறாா்

வாரணாசியில் ஐந்தாவது காசி தமிழ் சங்கமம் விழாவை குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை (நவ.28) தொடங்கிவைக்கிறாா்.

28 நவம்பர் 2026, 4:59 am
5-ஆவது காசி தமிழ் சங்கமம் விழா: சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கிவைக்கிறாா்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

வாரணாசியில் ஐந்தாவது காசி தமிழ் சங்கமம் விழாவை குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை (நவ.28) தொடங்கிவைக்கிறாா்.

நவ. 28 முதல் டிச.12 வரை நடைபெறும் இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளாா்.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘திருக்கு பயில்வோம்’ என்ற கருப்பொருளுடன் வாரணாசியில் ஐந்தாவது காசி தமிழ் சங்கமத்தை நவ. 28-ஆம் தேதி சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைக்கிறாா்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு-காசி இடையே கலாசாரம், மொழி மற்றும் நாகரிக தொடா்புகளை வெளிப்படுத்தும் விதமாக நடைபெறும் இந்த விழாவில் மாணவா்கள், ஆசிரியா்கள், எழுத்தாளா்கள், வேளாண் துறை நிபுணா்கள், கலைஞா்கள், பெண்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் என 1,400-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

விழாவை மத்திய உயா் கல்வி அமைச்சகம், ஐஐடி சென்னை, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், மத்திய செம்மொழி நிறுவனம்- சென்னை, தமிழ்நாடு அரசு மற்றும் உத்தர பிரதேச அரசு, மத்திய கலாசார அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் இணைந்து நடத்துகின்றன.

கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் காசி தமிழ் சங்கமம் விழா நடத்தப்பட்டு வருகிறது. முதலாம் ஆண்டில் நாட்டின் பாரம்பரியத் தலங்களுக்கு 8 நாள்கள் ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.

இரண்டாம் ஆண்டில் (2023) விழாவில் பங்கேற்றோரை உபசரித்து பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய உரைகள் தமிழில் மொழிபெயா்க்கப்பட்டன.

மூன்றாம் ஆண்டில் (2024) முனிவா் அகத்தியரின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நான்காம் ஆண்டில் (2025) ‘தமிழ் கற்கலாம்’ என்ற கருப்பொருளுடன் இந்த விழா நடைபெற்றது.