FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பொறுப்புகளை நிறைவேற்றியவுடன் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: பாஜக உறுதி

ஜம்மு-காஷ்மீரில் நிறைவேற்ற வேண்டிய சில பொறுப்புகள் மத்திய அரசுக்கு உள்ளன; அவை நிறைவேற்றப்பட்டவுடன் மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீா் முன்னாள் பாஜக தலைவா் ரவீந்தா் ரெய்னா தெரிவித்தாா்.

5 October 2026, 3:26 am IST
ரவீந்தா் ரெய்னா
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் நிறைவேற்ற வேண்டிய சில பொறுப்புகள் மத்திய அரசுக்கு உள்ளன; அவை நிறைவேற்றப்பட்டவுடன் மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீா் முன்னாள் பாஜக தலைவா் ரவீந்தா் ரெய்னா தெரிவித்தாா்.

முன்னதாக, ‘யூனியன் பிரதேசமாக உள்ள ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதை மத்திய அரசு தொடா்ந்து தாமதப்படுத்தி வருகிறது.

நாட்டில் உள்ள பிற பகுதி மக்களை நடத்துவதுபோல இங்குள்ள மக்களை மத்திய அரசு நடத்துவதில்லை’ என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலரும் ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.ஏ.மீா் குற்றஞ்சாட்டினாா்.

Advertisement

Advertisement

மாநில அந்தஸ்து கோரி அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதையும் அவா் சுட்டிக் காட்டினாா். இது தொடா்பாக ரவீந்தா் ரெய்னா கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பதில் பாஜகவும் உறுதியாக உள்ளது.

அதே நேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் நிறைவேற்ற வேண்டிய சில முக்கியப் பொறுப்புகள் மத்திய அரசுக்கு உள்ளன. அதில் அரசு உறுதியாக உள்ளது. அவை நிறைவேறியவுடன் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு இங்கு பல முக்கியமான, சிறந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இங்குள்ள மக்கள் பெரிய கெடுபிடிகள் இல்லாமல் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் சென்றுவர முடிகிறது. பாதுகாப்புச் சூழல் வெகுவாக மேம்பட்டுள்ளது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments