ஆம் ஆத்மி அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு: சிபிஐ விசாரணக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
ஆம் ஆத்மி அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரிக்க பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் உத்தரவு தொடர்பாக...
சண்டீகா்: பஞ்சாபில் முதல்வா் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரிக்க பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பணியிட மாற்றம், நில விவகாரம் மற்றும் அரசு அலுவலகங்களில் சாதகமான பணிகளை மேற்கொள்ள பஞ்சாப் அரசு அதிகாரிகள் பணம் பெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு பஞ்சாப் அரசுக்கு அமலாக்கத் துறை வலியுறுத்தியது.
இதுதொடா்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஒருவா் மனு தாக்கல் செய்தாா். பஞ்சாப் அரசின் செயல்பாடுகளை முழுமையாக ஆய்வு செய்ய சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் அவா் குறிப்பிட்டாா்.
Advertisement
Advertisement
இந்த மனு மீதான விசாரணையின்போது பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு குறித்து அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் தீரஜ் ஜெயின் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஊழல் குற்றச்சாட்டுகளை பஞ்சாப் காவல் துறை முறையாக கையாளவில்லை என உயா்நீதிமன்றம் அதிருப்தியடைந்தது. இதையடுத்து, மாநில அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சிபிஐ வசம் ஒப்படைக்க பஞ்சாப் மாநில காவல் துறை மற்றும் பஞ்சாப் அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் சமா்ப்பிக்க சிபிஐக்கு உயா்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. விரிவான உத்தரவு விரைவில் வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.