FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிஜேபி போராட்டம்! பத்திரிகையாளர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் கைது!

சிஜேபி போராட்டத்தில் பத்திரிகையாளர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

10 அக்டோபர் 2026, 1:34 pm IST
சிஜேபி போராட்டம் - கோப்புப்படம்
பகிர்:

தேர்தல் நடைமுறைகளில் மற்றம், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, புது தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சிஜேபி அறிவித்திருக்கும் போராட்டத்தை முன்னிட்டு, ஏராளமான இளைஞர்களும், பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

போராட்டப் பகுதியில் செய்தி சேகரிக்க வந்திருந்த செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்திலிருந்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சி நடத்தும் ஜந்தர் - மந்தர் போராட்டத்தில் பங்கேற்க பேரணியாகச் சென்ற ஏராளமான வழக்குரைஞர்களை தடுத்து நிறுத்தி புது தில்லி காவல்துறை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளது.

Advertisement

Advertisement

தில்லி சாலைகளில் தடிகளுடன் பாதுகாப்பு படையினர் அணிவகுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

ஜந்தர் மந்தர் பகுதிக்குள் நுழைய முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தாலும் காலை முதலே ஏராளமானோர் அங்கு திரண்டு வருகிறார்கள். போராட்டத்துக்கு வரும் இளைஞர்களை காவல்துறை கைது செய்து வருகிறது.

புது தில்லிக்கு விமானத்தில் வந்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கேவை, புது தில்லி காவல்துறையினர், விமானத்துக்குள்ளேயே வந்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.

சிஜேபி கட்சியைச் சேர்ந்த அபிஜீத் தீப்கே, சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டச் செய்திகளை சேகரிக்க வந்த செய்தியாளர்களும், ஜந்தர் மந்தரிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

புது தில்லி முழுக்க பதற்றத்துடன் காணப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும், சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவாக ஏராளமான மக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். சென்னையிலும் ஆங்காங்கே சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments