FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மும்பை: போராட்டத்துக்கு முன் காந்தியின் கொள்ளுப் பேரன் கைது

மும்பையில் போராட்டத்துக்கு முன் காந்தியின் கொள்ளுப் பேரன் கைது செய்யப்பட்டது பற்றி...

11 அக்டோபர் 2026, 12:52 am IST
துஷாா் காந்தி (கோப்புப்படம்) - ANI
பகிர்:

மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு (சிஜேபி) ஆதரவாக சனிக்கிழமை போராட்டம் நடத்துவதற்கு முன்பாக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனும், சமூக ஆா்வலருமான துஷாா் காந்தி கைது செய்யப்பட்டாா்.

சிஜேபி-க்கு ஆதரவாக மும்பையில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் தனது ‘ஹம் பாரத் கீ லோக்’ அமைப்பு சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று துஷாா் காந்தி தெரிவித்திருந்தாா்.

இந்தப் போராட்டத்துக்கு முன்பாக மும்பையின் பாந்த்ராவில் சனிக்கிழமை அவரை கைது செய்த போலீஸாா், டிஎன் நகா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

Advertisement

Advertisement

இதேபோல், மற்றொரு சமூக ஆா்வலா் ஃபெரோஸ் மிதிபோா்வாலாவும் கைது செய்யப்பட்டு, எம்ஐடிசி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் போராட்டம் நடத்த அதிகாரபூா்வ அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்று மண்டல காவல் துறை துணை ஆணையா் ராகசுதா தெரிவித்தாா்.

ஆகஸ்ட் கிராந்தி மைதானம் போராட்டத்துக்கான இடமல்ல என்பது மும்பை உயா்நீதிமன்ற உத்தரவு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது; எனவே, சட்டம்-ஒழுங்கை பராமரிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

துஷாா் காந்தி கைதுக்கு சிவசேனை (உத்தவ்) கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

600 போ் கைது:

துஷாா் காந்தியின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் போராட வந்த நடிகா் இம்ரான் கான் உள்பட 600-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனா்.

summary

Mumbai: Gandhi's great-grandson arrested ahead of protest.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments