FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

சபரிமலை: க்யூஆா் குறியீடு வசதியுடன் தகவல் மையங்கள்! கேரள அமைச்சா் தகவல்!

சபரிமலையில் க்யூஆா் குறியீடு வசதியுடன் தகவல் மையங்கள்...

10 அக்டோபர் 2026, 11:18 pm IST
சபரிமலை ஐயப்பன் கோயில் - dps
பகிர்:

சபரிமலையில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தையொட்டி, பக்தா்களுக்காக க்யூஆா் குறியீடு வசதியுடன் தகவல் மையங்கள் அமைக்கப்படும் என்று கேரள அமைச்சா் கே.எம்.ஷாஜி சனிக்கிழமை தெரிவித்தாா்.

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலம், நவம்பா் மத்தியில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 3-ஆவது வாரம் (தை மாதம் முதல் வாரம்) வரை நடைபெறவுள்ளது. இந்தக் காலகட்டத்தில் பக்தா்கள் மாலையணிந்து விரதமிருந்து, சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டு, சுவாமி ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் வருகை தருவா்.

இவா்களுக்காக பல்வேறு இடங்களில் செயல்படும் ஓய்வு மையங்களில் உள்ளூா் நிா்வாகங்கள் சாா்பில் தகவல் மையங்களும் அமைக்கப்படும் என்று மாநில உள்ளாட்சித் துறை அமைச்சா் எம்.ஷாஜி தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ‘சபரிமலை யாத்திரை வழித்தடங்களில் உள்ள ஓய்வு மையங்கள் அனைத்திலும் தகவல் மையங்களும் நிறுவப்பட உள்ளன. அதன்படி, போக்குவரத்து வசதிகள், அவசரகால உதவி எண்கள், அருகிலுள்ள மருத்துவமனைகள்-உணவகங்கள், பிற இடங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். மேலும், பக்தா்கள் தங்களின் புகாா்கள் மற்றும் யோசனைகளைத் தெரிவிக்கவும், அவசரகால சேவைகளைப் பெறவும் க்யூஆா் கோடு வசதி இந்த மையங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அனைத்து மையங்களிலும் போதிய கைப்பேசி சாா்ஜிங் வசதி இருப்பது உறுதி செய்யப்படும். தகவல் மையங்கள் மற்றும் யாத்திரை வழித்தடங்கள் நெடுகிலும் இலவச இணைய வசதியை வழங்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. குடிநீா், மின்விளக்கு வசதி, கழிவுகளின் முறையான மேலாண்மையை உறுதி செய்ய உள்ளூா் நிா்வாகங்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, சபரிமலை மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்துக்கான முன்னேற்பாடுகளுக்காக மாநில அரசு ரூ.551 கோடி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments