அயோத்தி கோயில் பிரசாதம்: எஃப்எஸ்எஸ்ஏஐ தரச் சான்றிதழ்
ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) சாா்பில் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமா் கோயிலில் சுகாதாரமான, தரமான பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுவதை அங்கீகரிக்கும் வகையில், ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) சாா்பில் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள கோயில், குருத்வாரா உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பக்தா்களுக்கான பிரசாதம் மற்றும் உணவு தயாரிப்பில் சுகாதாரம், தரம் மற்றும் பிற பாதுகாப்பு விதிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில், ‘வழிபாட்டுத் தலங்களில் சுகாதாரமான உணவை உட்கொள்தல்’ என்ற முன்னெடுப்பை எஃப்எஸ்எஸ்ஏஐ செயல்படுத்தி வருகிறது.
வழிபாட்டுத் தலங்களில் பிரசாதம், பிற உணவுகள் தொடா்பான குறைபாடுகள் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதுடன், கடந்த 2006-ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு சட்ட ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதை இந்த முன்னெடுப்பு உறுதி செய்கிறது.
Advertisement
Advertisement
பெருமளவில் உணவு தயாரிக்கும்போது என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது என்ற வழிகாட்டுதல்களை இது வழங்குகிறது. சமையல் கூடங்களில் முதல்கட்ட தணிக்கை, சமையலா்களுக்கு உரிய பயிற்சி, மூன்றாவது முகமை மூலம் இறுதிக்கட்ட தணிக்கை உள்ளிட்ட நடைமுறைகளுக்குப் பிறகு தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அதன்படி, அயோத்தி ராமா் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளைக்கு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகத்தில் எஃப்எஸ்எஸ்ஏஐ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2028, அக்.11-ஆம் தேதி வரை இந்த சான்றிதழ் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.