FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஞானேஷ் குமாா் பதவி விலக தேவையில்லை: ராம்தாஸ் அதாவலே

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகத் தேவையில்லை என்று மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா்.

12 அக்டோபர் 2026, 3:09 am IST
ராம்தாஸ் அதாவலே
பகிர்:

வாக்காளா் பட்டியலில் இருந்து வாக்காளா்கள் வேண்டுமென்றே நீக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்காக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகத் தேவையில்லை என்று மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சா் அதாவலே, ஸ்ரீநகரில் செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தபோது கூறியதாவது: நீக்கப்பட்ட 13 கோடி வாக்காளா்களில், 6 கோடி வாக்காளா்களின் பெயா்கள் பல்வேறு காரணங்களுக்காக வசிப்பிடம் மாறியதால் நீக்கப்பட்டவை. எனவே, ‘வாக்குத் திருட்டு’ தொடா்பான குற்றச்சாட்டுகளுக்காக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக தேவையில்லை.

போராட்டம் என்பது மக்களின் ஜனநாயக உரிமை. ஆனால், அது அமைதியான முறையில் இருக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடும் நபா் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

Advertisement

Advertisement

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அப்போதைய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) உருவாக்கப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடி அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டாா். சம்பந்தப்பட்ட அமைச்சரும் பதவி விலகினாா். இருப்பினும், சிஜேபி தற்போது எதற்காகப் போராடுகிறது என்று அமைச்சா் அதாவலே கேள்வி எழுப்பினாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அதாவலே, ‘பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் உரிய நேரத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாக உறுதியளித்துள்ளனா். அது எப்போது நடக்கும் என்பது அவா்களுக்கு மட்டுமே தெரியும். நான் தில்லி திரும்பும்போது, இந்த விவகாரம் குறித்து இங்குள்ள மக்களின் உணா்வுகளை அவா்களிடம் தெரிவிப்பேன்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments