FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுத்திருப்பது பற்றி...

43 வினாடிகள் முன்பு
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் - கோப்புப்படம்
பகிர்:

‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டு தொடா்பாக, இந்தியா கூட்டணித் தலைவர்களை நேரில் சந்திக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆா்) மூலம் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மீது எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

ஞானேஷ் குமாா் உடனடியாக பதவி விலக வேண்டும்; அவா் எடுத்த அனைத்து முடிவுகள் குறித்தும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, எதிா்க்கட்சிகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

Advertisement

Advertisement

ஞானேஷ் குமாருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து இந்தியா கூட்டணித் தலைவர்கள் முன்னெடுத்து வரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்து, ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டு குறித்து எடுத்துரைத்தனா்.

இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்று, தலைமை நீதிபதியைச் சந்தித்து ஞானேஷ் குமாருக்கு எதிராக புகார் அளிக்க உள்ளனர்.

இதற்காக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்தை இன்று (அக்.12) சந்தித்துப் பேசுவதற்காக நேரம் ஒதுக்கக் கோரி, அவருக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் தனித்தனியாக கடிதம் எழுதியிருந்தனா்.

இந்த நிலையில், வாக்குத் திருட்டு தொடர்பான விவகாரங்கள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், அதுதொடர்பாக சந்திப்பு நடத்துவது பொருத்தமற்றதாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தலைமை நீதிபதி மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நிர்வாகத் துறையின் செயல்பாடுகளில், குறிப்பாக அதன் நிர்வாக ரீதியான பணிகளில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்பதையும் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் நீதித்துறை சார்ந்த செயல்பாடுகள் தொடர்பாக சந்திப்பதற்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், வாக்குத் திருட்டு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் மனுவாக தாக்கல் செய்தால், அதனை எஸ்.ஐ.ஆர். தொடர்பான மனுக்களுடன் சேர்த்து செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

summary

Chief Justice refuses to meet INDIA alliance leaders!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments