இந்தூரில் மினிபேருந்தை திருடி வாகனங்கள் மீது மோதிய நபர்; இருவர் காயம்
இந்தூரில் மினி பேருந்தை திருடி வாகனங்கள் மீது மோதிய சம்பவம் பற்றி....
இந்தூரில் மினி பேருந்தை திருடி வாகனங்கள் மீது மோதிய நபரால் பரபரப்பு நிலவியது.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில்செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டிருந்த மினி பேருந்தை திருடிய நபர், அதை அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டிச் சென்று இரண்டு வாகனங்கள் மற்றும் மின் கம்பம் மீது மோதினார். இந்த சம்பவத்தில் அவரும் ஆட்டோ ஓட்டுநரும் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
மினி பேருந்து ஓட்டுநர் சாவியை உள்ளேயே மறந்து வைத்துவிட்டு வாகனத்தை சிறிது நேரம் கவனிக்காமல் விட்டுச் சென்றபோது, விஜய் நகர் பகுதியில் உள்ள சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கூடுதல் காவல் துணை ஆணையர் ஓம் பிரகாஷ் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மினி பேருந்தை எடுத்துக்கொண்டு அதிவேகமாகச் சென்று இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது மோதியதாகவும், கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் பின்னர் ஒரு சந்திப்பில் மின் கம்பம் மீது மோதியதாகவும் அவர் கூறினார்.
இதில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
"குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மனநலப் பாதிப்பு இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் சுயநினைவின்றி உள்ளார். சுயநினைவு திரும்பியதும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று பிரகாஷ் மேலும் கூறினார்.
A man allegedly stole a parked minibus in Madhya Pradesh's Indore on Tuesday and went on a reckless driving spree, crashing into two vehicles and an electric pole and injuring an autorickshaw driver and himself, police said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.