FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குடியேறிய 2வது நாளில் துயரம்! 30வது மாடியிலிருந்து விழுந்து மென்பொருள் பொறியாளர் மரணம்

குடியேறிய 2வது நாளில் 30வது மாடியிலிருந்து விழுந்து மென்பொருள் பொறியாளர் மரணம்

13 அக்டோபர் 2026, 12:25 pm IST
30வது மாடியிலிருந்து விழுந்து இளைஞர் பலி
பகிர்:

ஹைதராபாத்தைச் சேர்ந்த 29 வயது மென்பொருள் பொறியாளர், பெங்களூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 30வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரின் கோஃப் எட்ஜ் அடுக்குமாடிக் குடியிருப்பில் திங்கள்கிழமை காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், இரண்டு நாள்களுக்கு முன்புதான், இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டுக்கு வாடகைக்கு குடியேறியிருந்தார்.

Advertisement

Advertisement

குடியிருப்பின் காவலர், இது குறித்து அக்கம் பக்கத்தினருக்குத்தகவல் தெரிவித்து,அவர்கள் விரைந்து வந்து, மென்பொறியாளரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியிருக்கிறார்கள்.

அவர் குடியேறிய வீட்டிலிருந்து, பெற்றோருக்கு எழுதப்பட்ட தற்கொலை கடிதத்தைக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இவரது இறப்புக்கான காரணம் குறித்து குடும்பத்தாரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments