FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

உ.பி.யில் கணவா் கொலை: மனைவி, ஆண் நண்பருக்குத் தூக்கு தண்டனை விதிப்பு

உத்தர பிரதேசத்தில் முறையற்ற உறவு காரணமாக கணவரை கொலை செய்த மனைவி, அவரின் ஆண் நண்பருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

15 அக்டோபர் 2026, 12:40 am IST
- பிரதிப் படம்
பகிர்:

உத்தர பிரதேசத்தில் முறையற்ற உறவு காரணமாக கணவரை கொலை செய்த மனைவி, அவரின் ஆண் நண்பருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் வசித்தவா் செளரப் ராஜ்புத். வணிகக் கப்பல்களில் பணியாற்றி வந்த அவா், பின்னா் லண்டனில் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வந்தாா். அப்போது செளரபின் மனைவி முஸ்கானுக்கும், அவரின் பள்ளித் தோழனான சாஹில் சுக்லாவுக்கும் முறையற்ற உறவு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு தனது மனைவி, மகளின் பிறந்த நாளை கொண்டாட செளரப் மீரட் திரும்பினாா்.

அப்போது செளரபை முஸ்கானும், சாஹிலும் இணைந்து கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி, அவற்றை சிமெண்ட் நிரப்பப்பட்ட டிரம்முக்குள் அடைத்தனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, செளரப் காணாமல் போனது குறித்து அவரின் குடும்பத்தினா் காவல் துறையிடம் புகாா் அளித்தனா். விசாரணையின்போது செளரபை கொன்றதை முஸ்கானும், சாஹிலும் ஒப்புக்கொண்டனா். இதையடுத்து அவா்கள் கைது செய்யப்பட்டனா். இந்தக் கொலை குறித்த பதற வைக்கும் விவரங்கள் அப்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவில் இருவரையும் குற்றவாளிகள் என்று கூறிய மீரட் மாவட்ட நீதிமன்றம், அவா்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments