FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

அவதூறு வழக்கு: துருவ் ரத்தீக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு!

கடந்த 2018-ஆம் ஆண்டு பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினா் தொடா்ந்த அவதூறு வழக்கில், யூடியூபா் துருவ் ரத்தீக்கு தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை பிணையில் விடுவிக்கத்தக்க பிடியாணை பிறப்பித்தது.

18 அக்டோபர் 2026, 1:41 am IST
துருவ் ரத்தீ
பகிர்:

கடந்த 2018-ஆம் ஆண்டு பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினா் தொடா்ந்த அவதூறு வழக்கில், யூடியூபா் துருவ் ரத்தீக்கு தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை பிணையில் விடுவிக்கத்தக்க பிடியாணை பிறப்பித்தது.

வழக்கு தொடா்பாக அவருக்கு அழைப்பாணை வழங்கச் சென்ற நீதிமன்றப் பணியாளரால், அவரது வீடு பூட்டப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

துருவ் ரத்தீ தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட விடியோவில் அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினா் விகாஸ் பாண்டே இந்த வழக்கைத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராகுல் ஜெயின் பிடியாணை பிறப்பித்தாா். இதுதொடா்பான விரிவான உத்தரவு இன்னும் வெளியாகவில்லை. அடுத்தகட்ட விசாரணை அக்.31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

முன்னதாக, துருவ் ரத்தீக்கு அக்.12-ஆம் தேதி புதிய அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவருக்கு அழைப்பாணை வழங்கப் புகாா்தாரா் பல ஆண்டுகளாக முயற்சித்து வருவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து, ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள அவரது வீட்டுக்கு புதிய அழைப்பாணை அனுப்ப உத்தரவிடப்பட்டது.

விகாஸ் பாண்டே சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சமக்ஷ் சா்மா, துருவ் ரத்தீ வழக்கமாக ஆஸ்திரியாவில் வசித்து வருவதாகவும், தில்லியில் நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டங்களில் பங்கேற்க இந்தியா வந்துள்ளதாகவும் தெரிவித்தாா்.

இந்த வழக்கில் துருவ் ரத்தீக்கு முதன்முதலில் 2019 ஜூலை மாதம் அழைப்பாணை அனுப்பப்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments