FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எஸ்ஐஆர் எதிர்ப்புப் போராட்டம்! நிர்மலா சீதாராமன் கணவர் வரகலா பிரபாகர் பங்கேற்கிறார்!

எஸ்ஐஆர் எதிர்ப்புப் போராட்டத்தில் நிர்மலா சீதாராமன் கணவர் வரகலா பிரபாகர் பங்கேற்பது பற்றி...

வரகலா பிரபாகர் - ENS
பகிர்:

எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிராக தில்லியில் அக். 23ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவரும், பொருளாதார நிபுணருமான வரகலா பிரபாகர் பங்கேற்க உள்ளார்.

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடைமுறை மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறும் நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் இதில் பங்கேற்பது கவனம் பெற்றுள்ளது.

எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிராக திரளும் மக்கள் என்ற கூட்டமைப்பு இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அக்டோபர் 14 அன்று உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பிற பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் இணைந்துள்ளன.

Advertisement

Advertisement

எஸ்ஐஆர் நடைமுறை, ஜனநாயகத்துக்கு எதிரானது என்ற முழக்கத்துடன், ஜனநாயகத்தை மீட்டெடுப்பது, நாடு முழுவதும் ஜந்தர் மந்தர்களை உருவாக்குவது என்ற நோக்கத்துடன், அக்டோபர் 23-ஆம் தேதி பேரணி ஒன்றை நடத்தப்போவதாகவும் இந்தக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மக்களின் கையிலும் மூவர்ணக் கொடி, ஒவ்வொரு தெருவிலும் ஒரு ஜந்தர் மந்தர் என்பதே இப்போராட்டத்தின் முழக்கமாக உள்ளது.

இந்த போராட்டத்தில், கரப்பான்பூச்சி மக்கள் கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே, நடிகரும், சமூக ஆர்வலருமன பிரகாஷ் ராஜ், மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் கிஷோர், அனைத்து மாணவர்கள் அமைப்பின் தலைவர் நேஹா போரா உள்ளிட்டோருடன், வரகலா பிரபாகரும் போராட்டத்தில் இணைகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments