FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரூ. 500 கோடி ஆடியோ விவகாரம்: தடயவியல் விசாரணைக்கு உத்தரவு? ஃபட்னவீஸ் அதிரடி!

மராத்தா இடஒதுக்கீட்டு போராட்டம் தொடர்பாக வெளியான ஆடியோ சாட்சியங்கள் பற்றி..

முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் - file photo
பகிர்:

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தை பலவீனப்படுத்த போராட்டக்குழு தலைவர் மனோஜ் ஜராங்கே பாட்டீலுக்கு, சிவசேனை கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ரூ. 500 கோடி பணம் கொடுத்ததாக வெளியான ஆடியோ குறித்து தடயவியல் முறையில் விசாரணை நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.

மகாராஷ்டிர சட்டமேலவை தேர்தலில் நாக்பூர் பட்டதாரிகள் தொகுதிக்கான வாக்கைச் செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஜராங்கேயின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையின் நிர்வாகிகள் குழு தன்னைச் சந்தித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பட்னவீஸ்,

Advertisement

Advertisement

துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்த வெளியான ஆடியோ உரையாடல்கள் அனைத்தும் முழுமையான தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். தன்னை அமைதிப்படுத்தவும், மராத்தா இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை பலவீனப்படுத்தவும் சதி செய்யப்பட்டுள்ளதாக அந்தப் போராட்ட ஆர்வலர் ஜராங்கே குற்றம் சாட்டியிருந்தார்.

துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவிடமிருந்து ரூ. 500 கோடியைப் பெற்று, அதைத் தனது மகனும், எம்.பி.யான ஸ்ரீகாந்த் ஷிண்டே மூலம் வழங்கினார் என்று ஜராங்கே முன்வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு சவால் விடுத்ததைத் தொடர்ந்து, அவர் இந்த ஆடியோவை பொதுவெளியில் வெளியிட்டார்.

அந்த ஆடியோ கிளிப்களில் ஒன்றில், ஒரு பெண் ஸ்ரீகாந்த் ஷிண்டே மூலமாக ஜராங்கேயிடம் ரூ. 500 கோடியை ஒப்படைக்கப்பட்டதாகக் கூறுவது பதிவாகியுள்ளது. மேலும், 2024 பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஜராங்கேயின் செல்வாக்கு அதிகரித்து வருவது அரசியல் ரீதியாக என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த விவாதங்களும் அந்தப் பதிவில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆடியோவில் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள சில பாஜக தலைவர்களிடமும் சிவசேனை தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. எல்லோரிடமும் ஒரே கேள்விதான் எழுகின்றது.. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் இந்த உரையாடல்கள் இப்போது வெளிவந்துள்ளன? இவற்றின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் என்ன? யாரை இலக்கு வைக்கிறார்கள்? என்ன நோக்கத்திற்காக? இது தொடர்பாக பல கேள்விகள் உள்ளதாக பட்னவீஸ் கூறினார்.

இந்த ஆடியோ குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜராங்கேயும் கோரிக்கை விடுத்துள்ளது. சிவசேனை தரப்பும் விசாரணைக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. பாஜகவும் அதே கோரிக்கையை முன்வைத்துள்ளது.

எனவே, தடயவியல் முறைகளைப் பயன்படுத்தி இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். உண்மை எதுவோ, அது நிச்சயம் கண்டறியப்படும் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments