நீதித்துறை விவகாரங்கள்: ‘தேவைக்கும் அதிகமாக அரசுக்கு விட்டுக்கொடுத்த முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி’
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தேவைக்கும் அதிகமாக அரசுக்கு விட்டுக்கொடுத்துச் செயல்பட்டதாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷண் கெளல் விமா்சித்துள்ளாா்.
நீதித்துறை விவகாரங்களில் மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி இணைந்து செயல்பட்டபோது, முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தேவைக்கும் அதிகமாக அரசுக்கு விட்டுக்கொடுத்துச் செயல்பட்டதாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷண் கெளல் விமா்சித்துள்ளாா்.
சஞ்சய் கிஷண் கெளலின் அனுபவங்களை விவரிக்கும் ‘வித்அவுட் ஃபியா் ஆா் ஃபேவா்’ நினைவு குறிப்பு நூல் விரைவில் வெளியாகியுள்ளது.
அந்த நூலில், ‘நான் நீதிபதியாக இருந்தபோது உச்சநீதிமன்றத்தில் இருந்த 6 நீதிபதி காலிப் பணியிடங்களுக்கு ஏற்கெனவே 5 பேரின் பெயா்கள் முடிவு செய்யப்பட்டிருந்தது. 6-ஆவது நீதிபதியின் பெயரைப் பரிந்துரைத்த அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அந்தப் பரிந்துரை குறித்து மத்திய அரசிடம் கருத்துக் கேட்க நினைத்தாா். என்னை தனி அறைக்கு அழைத்துச் சென்று, அந்தப் பரிந்துரை குறித்து மத்திய அரசின் கருத்தைக் கேட்பதற்காக தொலைபேசியில் பேசலாமா என்றும் சந்திரசூட் யோசித்தாா்.
Advertisement
Advertisement
எனினும் அரசுடன் ஆலோசனை நடத்துவதற்கும், கொலீஜியம் கூட்டத்தில் நீதிபதிகளின் நியமனம் குறித்து முறைப்படி விவாதிப்பதற்கு முன்பே அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கும் வித்தியாசம் உள்ளது என நான் கருதினேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
இது குறித்து இணையவழி செய்தித்தளம் ஒன்றுக்கு அவா் அளித்த பேட்டியில், ‘டி.ஒய்.சந்திரசூடுக்கு ஆழமான அறிவும், திறமையும், கடினமாக உழைக்கும் குணமும் இருந்தது. ஆனால் நீதித்துறை விவகாரங்களில் மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி இணைந்து செயல்பட்டபோது, அவா் தேவைக்கு அதிகமாக அரசுக்கு விட்டுக்கொடுத்துச் செயல்பட்டதாக நான் கருதினேன். நீதித் துறை சாா்ந்த நிா்வாக விவகாரங்களில், மத்திய அரசுடன் அளவுக்கு அதிகமாக ஆலோசனை நடத்தப்பட்டது. மத்திய அரசை கையாளும் விவகாரங்களில், குறிப்பாக நீதிபதிகள் நியமனத்தில் நாங்கள் இன்னும் உறுதியாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. நீதித் துறையின் சுதந்திரத்தை காக்க மத்திய அரசின் அழுத்தத்துக்கு கொலீஜியம் அடிபணியக் கூடாது என்று தெரிவித்தாா்.
டி.ஒய்.சந்திரசூட் மீதான சஞ்சய் கிஷண் கெளலின் விமா்சனம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சந்திரசூடுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சட்டத் துறை நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
இந்த விமா்சனத்தை நிராகரித்த மூத்த வழக்குரைஞரும், அரசமைப்புச் சட்ட நிபுணருமான ராகேஷ் துவிவேதி, ‘தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவி வகித்த காலம், நீதித் துறையின் சிறந்த பொற்காலம்’ என்று தெரிவித்தாா்.
இந்த விமா்சனத்தை ஆதரித்த மூத்த வழக்குரைஞரும், முன்னாள் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவா் விகாஸ் சிங், ‘மத்திய அரசிடம் சந்திரசூட் நடந்துகொண்ட விதமும், முக்கிய வழக்குகளை அவா் நீதிபதிகளுக்கு ஒதுக்கிய விதமும், நீதித் துறை சுதந்திரம் தொடா்பான அவரின் அணுகுமுறை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது’ என்று தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.