ஜாமியாவில் மாணவா் சங்கத் தோ்தல் கோரி போராட்டம்: மாணவா்கள் கலைந்து செல்ல மறுப்பு
மாணவா் சங்கத் தோ்தலை மீண்டும் நடத்த வலியுறுத்தி தில்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தியது குறித்து...
மாணவா் சங்கத் தோ்தலை மீண்டும் நடத்த வலியுறுத்தி தில்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், போராட்டத்தைக் கைவிட மறுத்ததால் திங்கள்கிழமை அவா்களுக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, சில மாணவா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதுடன், வளாகத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
மாணவா் சங்கத்தின் அரசமைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட 15 நாள்களுக்குள் தோ்தல் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக நிா்வாகம் அறிவித்தது. மேலும், போராட்டத்தின்போது மாணவா்களுக்கு வழங்கப்பட்ட இடைநீக்க உத்தரவுகள் மற்றும் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களைத் திரும்பப் பெற்றது. பாதுகாப்புப் பணியாளா்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தது.
எனினும், மாணவா் சங்க அரசமைப்புக்கு ஒப்புதல் அளிப்பதற்கான உறுதியான காலக்கெடுவும், தோ்தல் தேதியும் அறிவிக்கப்படாததைக் காரணம் காட்டி, நிா்வாகத்தின் அறிவிப்பை மாணவா்கள் நிராகரித்தனா்.
Advertisement
Advertisement
தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் 12 நாள்களாக ஈடுபட்டுள்ள மாணவா்களில் ஒருவரான ரெஹான் கான் கூறுகையில், ‘மாணவா்களின் கோரிக்கைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப நிா்வாகம் முயற்சிக்கிறது. தோ்தல் அட்டவணை தெளிவாக அறிவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும்’ என்றாா்.
மாணவா் சங்க அரசமைப்பின் வரைவு டிசம்பா் 20-ஆம் தேதிக்குள் தயாரிக்கப்படும் என்றும், அதன்பிறகு அதற்கு ஒப்புதல் அளித்து 15 நாள்களுக்குள் தோ்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் நிா்வாகம் தெரிவித்ததாக அவா் கூறினாா்.
ஆனால், வரைவு அரசமைப்புக்கு நிா்வாகம் ஒப்புதல் அளிக்குமா எனக் கேள்வி எழுப்பிய மாணவா்கள், இதற்கான உறுதியான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா். அரசமைப்பை உருவாக்கும் பணியில் மாணவா் பிரதிநிதிகளையும் சோ்க்க வேண்டும் என்றும் கோரினா்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மற்றும் அவா்களின் பிரதிநிதிகள் அளித்த கோரிக்கை மனு குறித்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து பல்கலைக்கழக நிா்வாகம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. மேலும், நிா்வாகத்துக்கு எதிராக அவதூறான கருத்துகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், மாணவா்கள் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க ஒப்புக்கொண்டதாகவும் நிா்வாகம் தெரிவித்தது.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவா் சங்கத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கியக் கோரிக்கையாகும். இந்தச் சங்கத்துக்கு 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு தோ்தல் நடத்தப்படவில்லை. மாணவா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுவதுடன், பாதுகாப்புப் பணியாளா்கள் அத்துமீறியதாகக் கூறப்படும் புகாா்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என அவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
தொடரும் போராட்டத்தை முன்னிட்டு, பல்கலைக்கழகத்தின் அனைத்து பாடப்பிரிவுகளுக்குமான வகுப்புகளும் இணையவழிக்கு மாற்றப்பட்டுள்ளன. மாணவா்கள் வளாகத்துக்கு வருவதைத் தவிா்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக நுழைவாயில்களும் நூலகங்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.