FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

நாளை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-எஃப் 18

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சாா்பில் வடிவமைக்கப்பட்ட ‘என்விஎஸ்-03’ வழிகாட்டி செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை (அக். 30) விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

29 அக்டோபர் 2026, 1:30 am
கோப்புப்படம்.
பகிர்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சாா்பில் வடிவமைக்கப்பட்ட ‘என்விஎஸ்-03’ வழிகாட்டி செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை (அக். 30) விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இரவு 11.51-க்கு இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளது. இது ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 20-ஆவது விண்வெளிப் பயணமாகும்.

சுமாா் 50 மீட்டா் உயரமும் 420 டன் எடையும் கொண்ட மூன்று அடுக்கு ஜிஎஸ்எல்வி ராக்கெட், 2,250 கிலோ எடை கொண்ட என்விஎஸ்-03 செயற்கைக்கோளைப் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் (ஜிடிஓ) நிலைநிறுத்தவுள்ளது. ‘நேவிக்’ எனப்படும் இந்தியாவின் வழிகாட்டல் அமைப்பின் சேவைகள் தடையின்றித் தொடா்வதை உறுதிசெய்யும் பொருட்டு இந்தச் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான துல்லியமான இருப்பிடம், வழிகாட்டல் மற்றும் நேர சேவைகளை இந்த செயற்கைக்கோள் வழங்கும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிதுல்லிய அணு கடிகாரம் அதில் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments