FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கிராம பஞ்சாயத்து தேர்தல்! லடாக்கில் தீவிரமடையும் முன்னேற்பாடுகள்!

லடாக்கில் தேர்தல் முன்னேற்பாடுகள் ஆய்வு பற்றி...

தேர்தல்... - DIN
பகிர்:

லடாக் யூனியன் பிரதேசத்தில் நவம்பர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாயத்து மற்றும் நகராட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை, தலைமைச் செயலாளர் ஆஷிஷ் குந்த்ரா ஆய்வு செய்தார்.

லடாக்கில் மொத்தம் 193 பஞ்சாயத்துக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் செயல்முறை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் நிறைவடையும். அதேபோன்று லே மற்றும் கார்கில் ஆகிய இடங்களில் நகராட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

லடாக்கில் கடைசியாக 2018-ஆம் ஆண்டு பஞ்சாயத்து மற்றும் நகராட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. இவற்றின் பதவிக்காலம் 2023 நவம்பருடன் முடிவடைந்தது.

Advertisement

Advertisement

லே நகரில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய தலைமைச் செயலாளர் ஆஷிஷ் குந்த்ரா,

தேர்தல் முன்னேற்பாடுகள் , செயல்பாட்டு ஏற்பாடுகள், இதர வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தேர்தல் செயல்முறையைச் சுமுகமாகவும், பாதுகாப்பாகவும், முறையாகவும் நடத்துவதற்குத் துல்லியமான திட்டமிடல், பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் தேவையான ஏற்பாடுகளை உரியக் காலத்தில் முடிப்பது அவசியம்.

இந்தக் கூட்டத்தில் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆனந்த் ஜெயின், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் நிதி மாலிக், நிதித்துறை செயலாளர் சேவாங் தார்ச்சின் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி ராகுல் சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.

வேட்புமனு தாக்கல் நடைமுறைகள், தேர்தல் பொருள்கள் மற்றும் வாய்க்குப்பெட்டிகளின் இருப்பு, தேர்தல் பணியாளர்களை நியமித்தல் மற்றும் அவர்களுக்குப் பயிற்சி அளித்தல், வாக்குப்பதிவுக் குழுக்களை அந்தந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான கால அட்டவணை தயாரித்தல் எனத் தேர்தல் செயல்முறையின் ஒவ்வொரு நிலையிலும் சம்பந்தப்பட்ட துறைகளின் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார்.

தேர்தலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும், வாக்குப்பதிவுக் கருவிகளும் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

குறிப்பாக, தொலைதூர மற்றும் பனி படர்ந்த பகுதிகளில் உள்ள சவால்களைக் கருத்தில் கொண்டு, அணுகுவதில் சிக்கல் ஏற்படக்கூடிய வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு ஏற்ற மாற்றுத் திட்டங்களைத் தயார் செய்து வைக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments