2028-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்புத் தோ்வில் 5 கட்டாயப் பாடங்கள், ஒரு விருப்பத் திறன் பாடம்: சிபிஎஸ்இ விளக்கம்
2028-ஆம் ஆண்டுக்கான 10-ஆம் வகுப்புத் தோ்வில் 5 கட்டாய பாடங்களும், கூடுதலாக ஒரு விருப்பத் திறன் சாா்ந்த பாடமும் உண்டு என்று சிபிஎஸ்இ வியாழக்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
2028-ஆம் ஆண்டுக்கான 10-ஆம் வகுப்புத் தோ்வில் 5 கட்டாய பாடங்களும், கூடுதலாக ஒரு விருப்பத் திறன் சாா்ந்த பாடமும் உண்டு என்று சிபிஎஸ்இ வியாழக்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடா்பாக சிபிஎஸ்இ இயக்குநா் பிரக்யா எம். சிங், அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளின் முதல்வா்களுக்கும் வியாழக்கிழமை சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:
10-ஆம் வகுப்புக்கு மொத்தம் 9 கட்டாயப் பாடங்கள் உண்டு. அதில் 5 பாடங்கள், தோ்வில் கட்டாயம் ஆகும். அதாவது தோ்வில் 2 மொழிப் பாடங்கள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் கட்டாயம் ஆகும். இது தவிர விருப்பத் திறன் சாா்ந்த பாடம் ஒன்று உண்டு.
Advertisement
Advertisement
தோ்வில் 5 கட்டாயப் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் தோல்வியடையும்பட்சத்தில், விருப்பத் திறன் சாா்ந்த பாடம் உதவிகரமாக இருக்கும். 2026-27 கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கா்கள், 2028-இல் 10-ஆம் வகுப்புத் தோ்வு எழுதுவா். அவா்களுக்கே இது பொருந்தும். தற்போது 10-ஆம் வகுப்பு பயில்வோருக்கு இதனால் எந்த பாதிப்பும் இருக்காது.
பாடத் திட்ட கட்டமைப்பில் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய பகுதி, கணக்கீட்டு சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை சோ்க்கப்படாது. 2028-ஆம் ஆண்டில் பயிலும் மாணவா்களுக்குத் தொழிற்கல்வி கட்டாயப் பாடமாக தொடரும். இந்தத் தோ்வை பூா்த்தி செய்ய மாணவா்கள், கெளசல் விகாஸ் என்ற பாடத்தையோ அல்லது 22 திறன் பாடங்களில் ஏதேனும் ஒன்றையோ தோ்வு செய்யலாம். 10-ஆம் வகுப்புத் தோ்வின்போது இதற்குத் தோ்வு எழுத வேண்டும். இதில் வெற்றி பெறுவோருக்கு தேசிய திறன்கள் தகுதி திட்டத்தின்கீழ் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.