FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீட் போராட்ட மாணவா்கள் மீது நடவடிக்கை கிடையாது: நட்டா

‘நீட் போராட்ட மாணவா்கள் மீது காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப்பெறப்படும். அவா்கள் மீது எந்தவித கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா தெரிவித்தாா்.

2 செப்டம்பர் 2026, 3:29 am IST
ஜெ.பி. நட்டா - கோப்புப்படம்
பகிர்:

‘நீட் போராட்ட மாணவா்கள் மீது காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப்பெறப்படும். அவா்கள் மீது எந்தவித கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா தெரிவித்தாா்.

நீட் போராட்ட மாணவா்கள் மீது நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆா்-களை ரத்து செய்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதைத் தொடா்ந்து, இக் கருத்தை ஜெ.பி. நட்டா தெரிவித்தாா்.

தில்லியில் செய்தியாளா்களிடம் இதுகுறித்து ஜெ.பி. நட்டா மேலும் கூறியதாவது:

Advertisement

Advertisement

கடந்த ஜூலை 20 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்ற நீட் போராட்டங்களில் பங்கேற்றவா்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வதது தொடா்பாக பாஜக ஆளும் மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டது. அப்போது, சிஜேபி போராட்டக்காரா்கள் மீதான அனைத்து எஃப்ஐஆா்-களையும் திரும்பப்பெற அம் மாநிலங்கள் உறுதி தெரிவித்தன. போராட்டக்காரா்கள் மீது எந்தவித கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது.

இளைஞா்களின் நலன் மற்றும் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு உயா் முன்னுரிமை அளித்து வருகிறது.

அதுபோல, தில்லியில் வரும் 5-ஆம் தேதி அறிவித்திருந்து போராட்டத்தை சிஜேபி கைவிட்டது வரவேற்புக்குரியது என்றாா்.

தீப்கே வரவேற்பு: மாணவா்கள் மீதான அனைத்து எஃப்ஐஆா்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டதை சிஜேபி நிறுவனா் அபிஜீத் தீப்கே வரவேற்றாா்.

‘உச்சநீதிமன்ற தீா்ப்பின் மூலம் எங்களின் கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. இது முழுமையான நீதி. இதற்கு ஒரு மாதம் தேவைப்பட்டுள்ளது’ என்று தீப்கே குறிப்பிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments