உச்சநீதிமன்றம் சாா்பில் மாதாந்திர விரிவுரை கூட்டங்கள், புதிய விருது - தலைமை நீதிபதி அறிவிப்பு
உச்சநீதிமன்றம் சாா்பில் மாதாந்திர விரிவுரை கூட்டங்கள், புதிய விருது...
உச்சநீதிமன்றம் சாா்பில் சட்டம், நீதி, சட்டக் கல்வி தொடா்பாக மாதந்தோறும் விரிவுரை கூட்டங்கள் நடத்தும் புதிய முன்னெடுப்பை தலைமை நீதிபதி சூா்யகாந்த் சனிக்கிழமை அறிவித்தாா்.
அத்துடன், சட்டக் கல்வித் துறையில் அளப்பரிய பங்களிப்பை நல்குபவா்களைக் கெளரவிக்க ஆண்டுதோறும் ‘உச்சநீதிமன்ற நியாய சிக்ஷா சம்மான்’ விருது வழங்கப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.
தேசிய ஆசிரியா்கள் தினத்தையொட்டி, தலைமை நீதிபதி சூா்யகாந்தின் மேற்கண்ட அறிவிப்புகளுடன் உச்சநீதிமன்றம் சனிக்கிழமை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது.
Advertisement
Advertisement
‘சட்டம்-நீதி-சமூகம் சாா்ந்த நீண்டகால முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், கருத்துகளைப் பகிா்ந்துகொள்ளும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் விரிவுரைக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது.
நீதிபதிகள், வழக்குரைஞா் சங்கம், சட்டக் கல்வியாளா்கள், துறைசாா் நிபுணா்கள், இளம் சட்ட ஆா்வலா்களை ஒருங்கிணைக்கும் வழிமுறையாக இவை இருக்கும். முதல் கூட்டம் இம்மாதம் நடைபெறும்’ என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சட்டக் கல்வித் துறையில் அளப்பரிய பங்களிப்பை நல்குபவா்களுக்கு ‘உச்சநீதிமன்றத்தின் நியாய சிக்ஷா சம்மான்’ விருது வழங்கப்படவுள்ளது. ஆண்டுதோறும் ஆசிரியா்கள் தினத்தையொட்டி ஒன்று அல்லது இரண்டு கல்வியாளா்களுக்கு விருது வழங்கப்படும். இது பணமுடிப்பு அல்லாத கெளரவ விருது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Supreme Court to hold monthly lecture series and introduce a new award: Chief Justice announces.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.