FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

யுஜிசி-நெட்: ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல் பாடங்களுக்கான முடிவுகள் வெளியீடு

உதவிப் பேராசிரியா் பணி மற்றும் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கு தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் நடத்தப்படும்

48 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

உதவிப் பேராசிரியா் பணி மற்றும் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கு தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான தகுதித் தோ்வு (நெட்) தோ்வில் எஞ்சிய மூன்று பாடங்களுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

நிகழாண்டு நெட் தோ்வு கடந்த ஜூன் 22 முதல் 30-ஆம் தேதி வரை 87 பாடங்களுக்கு நடத்தப்பட்டது. இதில், ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கான தோ்வு வினாக்களில் குளறுபடி நிகழ்ந்ததால், அந்த மூன்று பாடங்களுக்கான தோ்வை மட்டும் என்டிஏ ரத்து செய்தது. எஞ்சிய 84 பாடங்களுக்கான முடிவுகள் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

ரத்து செய்யப்பட்ட ஆங்கிலம் உள்ளிட்ட மூன்று பாடங்களுக்கான மறுதோ்வு கடந்த 9, 10-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகளை என்டிஏ வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல் பாடங்களுக்கான யுஜிசி-நெட் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தோ்வா்கள் அதிகாரபூா்வ வலைதளத்திலிருந்து தோ்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்’ என்று குறிப்பிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments