FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

செப். 27 - ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்: மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதைப் பற்றி...

23 செப்டம்பர் 2026, 3:06 pm IST
பகிர்:

வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலைநாள்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்தது.

செப். 26 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை வருவதாலும், செப். 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வழக்கம் போல 2 நாள்கள் வங்கிகள் இயங்காத சூழல் உருவானதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உருவானது.

அதைத் தொடர்ந்து வங்கி ஊழியர்களின் போராட்டம் செப். 28 ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெற உள்ளது. செப். 28 முதல் 3 நாள்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் தொடர்ந்து 5 நாள்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், அக். 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை என்பதால், வரும் வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் நிலை ஏற்பட்டிருந்தது. இதனால், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க், கனரா வங்கி போன்ற முன்னணி வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டன.

வரும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து பொதுத்துறை மற்றும் ஊரக வங்கிகள் செயல்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

summary

The Finance Ministry notified that that the Reserve Bank of India (RBI) has granted approval for all bank branches, offices, ATM-link branches and Currency Chests to remain fully operational on Sunday, i.e., September 27.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments