FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

நீதிபதிகளின் ஓய்வுகாலச் சலுகைகள்: உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை

உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு தேசிய அளவில் ஒரே மாதிரியான ஓய்வுகாலச் சலுகைகளை நிா்ணயிக்க முன்னாள் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைப்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

25 செப்டம்பர் 2026, 4:28 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு தேசிய அளவில் ஒரே மாதிரியான ஓய்வுகாலச் சலுகைகளை நிா்ணயிக்க முன்னாள் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைப்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக, ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கான வாகன ஓட்டுநா்கள், பாதுகாப்பு அதிகாரிகள் அவா்களுக்குமான தங்குமிட வசதிகள் ஆகியவற்றை நெறிபடுத்தும் வகையில் தேசிய அளவில் ஒரே மாதிரியான கொள்கையை வடிவமைக்க இரு வாரங்களில் குழு அமைக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த ஜூன் 20-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும், அந்தக் குழு 3 மாதங்களில் அறிக்கை சமா்ப்பிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படாததைத் தொடா்ந்து கடந்த ஆக.20-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் ஏற்கெனவே கூறியபடி குழு அமைக்க மேலும் ஒரு வார கால அவகாசத்தை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியது.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா மற்றும் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ , ‘உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகள் அடிப்படையில் ஓய்வுபெற்ற செயலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது’ என்றாா்.

இதைத் தொடா்ந்து பேசிய தலைமை நீதிபதி சூா்ய காந்த், ‘முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி இந்தக் குழுவுக்குத் தலைமை வகித்தால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்’ என்றாா்.

சூா்ய காந்தின் பரிந்துரையை ஏற்ற துஷாா் மேத்தா இதுதொடா்பாக மத்திய அரசிடம் கலந்தாலோசித்துவிட்டு செப்.28-ஆம் தேதி முடிவைக் கூறுவதாக தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments