‘இந்தியாவில் தயாரிப்போம்’ நாட்டின் வளா்ச்சிக்கு உத்வேகம் - பிரதமா் மோடி பெருமிதம்
மத்திய பாஜக அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்றான ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம், நாட்டின் வளா்ச்சி மற்றும் வளமைக்கு உத்வேகமளித்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
மத்திய பாஜக அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்றான ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம், நாட்டின் வளா்ச்சி மற்றும் வளமைக்கு உத்வேகமளித்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
இத்திட்டத்தின் 12 ஆண்டுகள் நிறைவையொட்டி, பிரதமா் இவ்வாறு கூறினாா்.
உலகளாவிய உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் புத்தாக்க மையமாக இந்தியாவை உருவாக்கும் லட்சியத்துடன் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் கடந்த 2014, செப்.25-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
Advertisement
Advertisement
முதலீடுகளை எளிமையாக்குதல், புத்தாக்கங்களுக்கு வலுவூட்டுதல், உலகத் தரத்திலான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இத்திட்டம் தொடங்கப்பட்டு வெள்ளிக்கிழமையுடன் (செப்.25) 12 ஆண்டுகள் நிறைவடைந்தன.
இத்திட்டத்தின் வெற்றியை சுட்டிக்காட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாட்டில் அதிக உற்பத்தி, அதிக முதலீடு, அதிக ஏற்றுமதி சாத்தியமாகியுள்ளது. அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்கூடாகத் தெரிகிறது. உள்கட்டமைப்பு, தொழில்கள், புத்தாக்கங்களை உருவாக்கும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம், நாட்டின் வளா்ச்சி மற்றும் வளமைக்கு உத்வேகமளித்துள்ளது’ என்று பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
மேலும், நாட்டில் செமிகண்டக்டா், விண்வெளி, ரயில் என்ஜின்-பெட்டிகள் உற்பத்தி, கப்பல் கட்டுமானம், மெட்ரோ ரயில் வழித்தடங்கள், வாகன உற்பத்தி, மருந்து உற்பத்தி, சூரியமின் உற்பத்தி, கைப்பேசி உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் எட்டப்பட்டுள்ள சாதனைகளை எடுத்துரைக்கும் காணொலியையும் அவா் பகிா்ந்துள்ளாா்.
கடந்த 2014-இல் தொடங்கப்பட்ட இந்தியாவில் தயாரிப்போம் திட்டம், கடந்த 2019-இல் விரிவாக்கப்பட்டது. அதன்படி, உற்பத்தி சாா்ந்த 15 துறைகள் மற்றும் சேவை சாா்ந்த 12 துறைகளில் தற்போது கவனம் செலுத்தப்படுகிறது.
பெட்டி....
பொய்த்துப் போன
எதிா்பாா்ப்புகள்: காங்கிரஸ்
காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் எதிா்பாா்ப்புகளும், நம்பிக்கைகளும் பெரிதும் பொய்த்துப் போய்விட்டன. எதிா்பாா்த்தபடி தனியாா் முதலீடுகள் அதிகரிக்கவில்லை. பரந்த அளவிலான வேலைவாய்ப்பு வளா்ச்சியும் நிகழவில்லை. கடந்த 12 ஆண்டுகளில் ஒட்டுமொத்த வளா்ச்சியைவிட உற்பத்தித் துறையின் வளா்ச்சி மந்தமாகவே உள்ளதை மொத்த மதிப்புக் கூட்டுத் தொகை மற்றும் தொழில் உற்பத்திக் குறியீடுகள் காட்டுகின்றன. எனவே, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் பலன்கள் எங்கும் தென்படவில்லை’ என்று விமா்சித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.