FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காசியாபாத்தில் 12-வது மாடியிலிருந்து தவறி விழுந்து 14 வயது சிறுமி பலி!

காசியாபாத்தின் ராஜ் நகர்ப் பகுதியின் உள்ள குடியிருப்பு வளாகத்தில் சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்..

26 செப்டம்பர் 2026, 1:37 pm IST
சிறுமி பலி
பகிர்:

காசியாபாத்தின் ராஜ் நகர்ப் பகுதியின் உள்ள குடியிருப்பு வளாகத்தின் 12-வது தளத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து 14 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையின் தகவலின்படி, இந்தச் சம்பவம் குறித்த தகவல் காலை 9 மணியளவில் நந்த்கிராம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. ராஜ் நகர் ரெசிடென்சியில் உள்ள 12-வது தளத்திலிருந்த குடியிருப்பிலிருந்து, 14-வது சிறுமி கீழே விழுந்ததாகக் கூறப்பட்டது. கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார்.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், நந்த்கிராம் காவல் நிலையக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக உடல் பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

சம்பவத்திற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை அறிய சிறுமியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருவதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தின் துல்லியமான நிகழ்வு, சிறுமி எவ்வாறு அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்தார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

விசாரணை மற்றும் உடற்கூறாய்வு முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments