FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சாலை ஆய்வை விடியோ எடுத்த நபரை கன்னத்தில் அறைந்த பொதுப்பணித்துறை அமைச்சர்!

தில்லியில் சாலைப் பணிகளை ஆய்வு செய்கையில் அதனை விடியோ எடுத்த நபரை பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா கன்னத்தில் அறைந்தது சர்ச்சையாகியுள்ளது.

27 செப்டம்பர் 2026, 7:45 pm IST
சாலை ஆய்வை விடியோ எடுத்த நபரை கன்னத்தில் அறைந்த பொதுப்பணித்துறை அமைச்சர்
பகிர்:

தில்லி நகர்ப்பகுதியில் சாலைப் பணிகளை ஆய்வு செய்கையில் அதனை விடியோ எடுத்த நபரை தில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா கன்னத்தில் அறைந்தது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

தில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் தரம் குறித்து இன்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கு வந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜர்னைல் சிங் சாலையின் மேற்பரப்பை கையால் பெயர்த்தெடுத்து அதன் உறுதித்தன்மை பற்றி கேள்வி எழுப்பினார்.

அப்போது அருகில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் இந்த நிகழ்வுகளை விடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அவரை அமைச்சர் திடீரென அறைந்தார்.

Advertisement

Advertisement

இளைஞரை அமைச்சர் அறையும் காணொலி சமூக ஊடகங்களில் பரவி விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

அந்த விடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால், உள்ளூர் மக்கள் சாலையின் கட்டுமானம் பற்றி கேள்வி எழுப்பியபோது வர்மா தனது நிதானத்தை இழந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அந்தப் பகுதிக்கு தானும் சென்று ஆய்வு நடத்தவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, தில்லி எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி பேசுகையில், “மோசமான தரத்தில் அமைக்கப்பட்ட சாலைக்கு பொதுமக்களின் பணத்தை செலவிட்ட அமைச்சர் கைது செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்.

அமைச்சரைப் போல இல்லாமல் ரவுடியைப் போல அவர் நடந்து கொள்வதாகக் கூறிய ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் பர்வேஷ் வர்மா, ஆம் ஆத்மி கட்சியினர் அங்குள்ள சூழலை விளக்காமல் விடியோவை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

”முதலில் சாலை கட்டுமானம் பற்றி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜர்னைல் சிங் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்குச் சென்று வருமாறு என்னிடம் கூறினார். ஆனால், ஆம் ஆத்மி தொண்டர்களை அங்கு வரவழைத்து அவதூறாகப் பேச வைத்தார். அதனால், ஒரு சாதாரண மனிதர் செயல்படுவதைப் போன்று நான் செயல்பட நேர்ந்தது.

சாலை கட்டுமானம் பற்றிய தணிக்கை சோதனைகளை தில்லி அரசு மேற்கொள்ளும். ஆனால், அரசுப் பணிகளுக்கு இடையூறு விளைவித்து கமிஷன் கேட்பதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

summary

Public Works Minister slaps person filming road inspection

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments