FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஞானேஷ் குமார் எப்படி பதவியில் தொடர்கிறார்? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்...

54 வினாடிகள் முன்பு
ஞானேஷ் குமார் - கோப்புப் படம்
பகிர்:

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய வேண்டும் எனவும் புகார் எழுந்தும் அவர் எப்படி பதவியில் தொடர்ந்து செயல்படுகிறார்? என விளக்கமளிக்கவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தில், தேர்தல் ஆணையத்த்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்டமுறையில் முடிவெடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஞானேஷ் குமாருக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ் ராகேஷ் குமார் சிங் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், 2025 அக்டோபர் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் மற்ற இரு ஆணையர்களும் குறைந்தது 14 முறை தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரசியலமைப்பின் 324-வது பிரிவின்படி 'தேர்தல் ஆணையத்திற்கு கூட்டு முடிவெடுக்கும் அதிகாரம்தான் உள்ளது. அப்படியிருக்க, எந்த அதிகாரத்தின் அடிப்படையில் ஞானேஷ்குமார் தனிப்பட்ட முறையில் முடிவெடுத்தார்? அவர் எப்படி தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் தொடர்ந்து செயல்படுகிறார்?' என்பதற்கான விளக்கத்தை அளிக்குமாறும் நீதிப் பேராணை கோரப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் வரை தலைமைத் தேர்தல் ஆணையரை இடைநீக்கம் செய்ய வேண்டும் எனவும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சுதந்திரமான நீதித்துறை விசாரணை ஆணையம் அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Election Commission row: Plea in Supreme Court alleges unilateral decision-making by CEC Gyanesh Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments