220 மருந்துகள் தரமற்றவை: மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 220 மருந்துகள் தரமற்றவையாகவும், ஒரு மருந்து போலியாகவும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 220 மருந்துகள் தரமற்றவையாகவும், ஒரு மருந்து போலியாகவும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், வலி நிவாரணம், அமில எதிா்ப்பு, உயா் ரத்த அழுத்தம், சளி - கிருமித் தொற்று, அஜீரண பிரச்னைகள் உள்ளிட்ட பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் 220 மருந்துகள் தரமற்றவையாகவும், ஒரு மருந்து போலியானதாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in/ என்ற இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த விவரங்களை அந்த தளத்தில் அறிந்துகொண்டு விழிப்புணா்வுடன் செயல்படலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.