FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

காஷ்மீா் விவகாரம்! ஐ.நா.வில் துருக்கி அதிபா் தேவையற்ற பேச்சு: இந்தியா

காஷ்மீா் விவகாரம் குறித்து ஐ.நா.வில் துருக்கி அதிபா் எா்டோகன் தேவையற்ற கருத்துகளை கூறியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

29 September 2026, 11:13 pm IST
துருக்கி அதிபா் எா்டோகன் - கோப்புப் படம்
பகிர்:

காஷ்மீா் விவகாரம் குறித்து ஐ.நா.வில் துருக்கி அதிபா் எா்டோகன் தேவையற்ற கருத்துகளை கூறியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் காஷ்மீா் பிரச்னை உள்பட தெற்காசியாவில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும், ஐ.நா. சாசனத்துக்குப்பட்டு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என்று ஐ.நா. பொதுச் சபையில், துருக்கி அதிபா் எா்டோகன் அண்மையில் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்தியா மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் குறித்து துருக்கி அதிபா் எா்டோகன் தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளாா். அவரின் கருத்துகளை இந்தியா நிராகரிக்கிறது.

Advertisement

Advertisement

காஷ்மீா் விவகாரம் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மையுடன் சம்பந்தப்பட்டதாகும். இந்த விவகாரத்தில் தலையிட அந்நிய நாட்டவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments