எறும்பு
எறும்பு உயிரினத்தில் சிறியது ஒற்றுமை கடின உழைப்பு
எறும்பு உயிரினத்தில் சிறியது
ஒற்றுமை கடின உழைப்பு
சுறுசுறுப்பு ஒத்துழைப்பு ஒழுக்கம்
Advertisement
Advertisement
சேமிக்கும் பழக்கம் உடையது!
-
கணக்கற்று ஒன்று கூடி
கவனமாய் மண்ணைச் சுமந்து
துணுக்குறாமல் உழைத்து மாளிகைபோல்
புற்றுகளைக் கட்டுவது விந்தை!
-
எறும்புகள் சமூகமாக வாழ்கின்றன
என்றும் குழுக்களாகப் பணியாற்றும்
எறும்புக் கூடுகள் மண்ணுக்கு
மாறா வளம்தரும் வள்ளல்!
-
எறும்புகள் மண்ணின் தன்மையை
எளிதாய் மாற்று கின்றன
மறுப்பு இன்றி உழவர்கள்
மாற்றுப் பயிருக்கு மாறஉதவும்!
மு.அ.அபுல் அமீன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.