சோ ராமசாமி இறந்துவிட்டதாக இரங்கல் தெரிவித்துவிட்டு தனது தவறான பதிவிற்கு மன்னிப்பு கோரினார் குஷ்பு
சோ.ராமசாமி இறந்து விட்டார் என்றும் அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்வதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகை குஷ்புக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சோ.ராமசாமி இறந்து விட்டார் என்றும் அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்வதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகை குஷ்புக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வலைத்தளவாசிகளின் எதிர்ப்பினை அடுத்து நடிகை குஷ்பு தனது தவறுக்காக ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுள்ளார் குஷ்பு. நடிகரும், ‘துக்ளக்' ஆசிரியருமான சோ ராமசாமி (80) கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நடிகையும், காங்கிரசின் அகில இந்திய செய்தி தொடர்பாளருமான குஷ்பு, தனது ட்விட்டரில் பக்கத்தில் அவர் இறந்துவிட்டதாகக் கூறி தவறுதலாக சில மணி நேரங்களுக்கு முன்பு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இணையவாசிகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அவர் உயிருடன் இருக்கிறார் என்றும் குஷ்புவிற்கு பதில் கூறி வருகின்றனர்.
Advertisement
Advertisement
அடுத்த ஒரு மணிநேரத்தில் தனது தவறை உணர்ந்து கொண்ட குஷ்பூ, உடனடியாக தனது பதிவிற்கு மன்னிப்பு கூறினார். ஆயிரம் முறை மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.