FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கனமழை எதிரொலி: கோவை வழியாக கேரளத்துக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து

கேரளத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கோவை வழித்தடத்தில் அந்த மாநிலத்துக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து

31 ஜனவரி 2024, 3:17 pm
பகிர்:

கோவை: கேரளத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கோவை வழித்தடத்தில் அந்த மாநிலத்துக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, சொரனூர் பகுதிகளில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக கோவை வழித்தடத்தில் கேரள மாநிலத்துக்கு இயக்கப்படும் ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மங்களூரு - நாகர்கோவில், மங்களூரு- சென்னை சென்ட்ரல், நாகர்கோவில் - எரநாடு விரைவு, கண்ணூர் -ஆலப்புழா விரைவு, கண்ணூர்- கோவை விரைவு, கோவை - கண்ணூர் பயணிகள் விரைவு, சொரனூர் - கோவை விரைவு, பாலக்காடு - திருநெல்வேலி விரைவு, திருவனந்தபுரம்- சென்னை சென்ட்ரல் வாராந்திர விரைவு ஆகிய ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சீரமைப்புப் பணிகள் முடிந்த பிறகே, இந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கப்படும் எனசெய்திக் குறிப்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments