FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அதிபர் டிரம்பை பதவிநீக்கக் கோரும் தீர்மானம் நிறைவேறியது

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதிபர் டொனால்ட் டிரம்பை பதவிநீக்கக் கோரும் தீர்மானம் நிறைவேறியது. 

31 ஜனவரி 2024, 7:05 pm IST
பகிர்:


அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதிபர் டொனால்ட் டிரம்பை பதவிநீக்கக் கோரும் தீர்மானம் நிறைவேறியது. 

தீர்மானத்திற்கு ஆதரவாக 220க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான இரு மசோதாக்கள் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் புதன்கிழமை நள்ளிரவு விவாதம் தொடங்கியது.

Advertisement

Advertisement

விவாதம் நிறைவடைந்த நிலையில, மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாக்களை கொண்டு வந்த ஜனநாயகக் கட்சியினருக்கு கீழவையில் போதுமான பலம் இருந்ததால், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, அந்த இரு மசோதாக்களும் அடுத்த மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையில் விசாரணைக்காக தாக்கல் செய்யப்படும். அங்கு டிரம்பின் குடியரசுக் கட்சியினரின் பலம் அதிகமாக உள்ளதால், அவரது பதவி நீக்கம் தொடர்பான மசோதா செனட் சபையில் நிராகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments