முகப்பு
சிறப்புச் செய்திகள்

ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு - லைவ் அப்டேட்ஸ்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று  முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். 

Updated On : 12 மார்ச், 2020 at 8:39 PM
பகிர்:
Updated On : 12 மார்ச், 2020 at 11:48 AM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தொடங்குவதில் நடிகா் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறாா். இதற்காக ஓராண்டுக்குப் பிறகு, ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா்களை கடந்த வியாழக்கிழமை(மாா்ச் 5) சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

இதன் தொடர்ச்சியாக,  மீண்டும் மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் இன்று (மாா்ச் 12) ஆலோசனை நடத்தினார். சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார், அரசியல் கள நிலவரம், கட்சி தொடங்குவது குறித்து இறுதி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று காலை 10.30 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Advertisement

Updated On : 12 மார்ச், 2020 at 11:48 AM

ரஜினி கூறும் மூன்று திட்டங்கள் என்னென்ன?

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். அரசியல் கட்சி தொடங்குவது குறித்து 3 திட்டங்களை வைத்திருப்பதாகக் கூறிய அவர், அரசியலில் மாற்றம் கொண்டு வருவதே தனது முடிவு என்றார். மேலும் விரிவான செய்திக்கு..

Updated On : 12 மார்ச், 2020 at 11:47 AM

தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டால்தான்.. அரசியல் கட்சி: நடிகர் ரஜினி திட்டவட்டம்

தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டால்தான், மக்களிடம் ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். மேலும் விரிவான செய்திக்கு..
Updated On : 12 மார்ச், 2020 at 11:46 AM

கேள்விகளை எதிர்கொள்ளாமல் சென்றுவிட்ட நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், அரசியல் பயணம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் தான் முதல்வராக பொறுப்பேற்க மாட்டேன் என்றும், தனக்கு முதல்வர் பதவி மீது ஆசையோ விருப்பமோ இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் விரிவான செய்திக்கு..
Updated On : 12 மார்ச், 2020 at 11:44 AM

தமிழக மக்கள் எதற்காக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்? ரஜினி சொன்ன ரகசியம்

2021ல் ஆட்சி மாற்றம் எனும் புரட்சியை தமிழக மக்கள் நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் விரிவான செய்திக்கு..
Updated On : 12 மார்ச், 2020 at 11:43 AM

அரசியல் மாற்றம்: கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை- நடிகர் ரஜினிகாந்த்

அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதை மக்கள் விரும்புவர் என நினைக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மேலும் விரிவான செய்திக்கு..

Updated On : 12 மார்ச், 2020 at 11:28 AM

நான் வருங்கால முதல்வர் என்று கூறுவதை ரசிகர்கள் முதலில் நிறுத்த வேண்டும். நான் ஆட்சித் தலைமை பொறுப்பு ஏற்பதில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

Updated On : 12 மார்ச், 2020 at 11:02 AM

 அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது நிகழவில்லை எனில் எப்போதுமே நிகழாது

Updated On : 12 மார்ச், 2020 at 11:01 AM

 இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை...

Updated On : 12 மார்ச், 2020 at 11:01 AM

 அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்...

Updated On : 12 மார்ச், 2020 at 11:01 AM

 கட்சி வேறு, ஆட்சி வேறு என்று தெரிய வேண்டும்...

Updated On : 12 மார்ச், 2020 at 11:01 AM

 வாக்குகளை பிரிக்க நான் வரவில்லை. மக்கள் ஒரு மாற்றத்தை கொண்டுவர தயாராக வேண்டும்

Updated On : 12 மார்ச், 2020 at 11:01 AM

 இந்தியா முழுவதும் இது பரவ வேண்டும்...

Updated On : 12 மார்ச், 2020 at 11:01 AM

 அப்போது நான் அரசியலுக்கு வருகிறேன்...

Updated On : 12 மார்ச், 2020 at 11:00 AM

 எழுச்சி தெரிய வேண்டும்...

Updated On : 12 மார்ச், 2020 at 11:00 AM

 சிஎம்,சிஎம் என்று சொல்லாமல் இந்த எழுச்சியைச் சொல்லுங்கள்...

Updated On : 12 மார்ச், 2020 at 11:00 AM

நான், 40, 44 ஆ... இப்போது 71, பிழைத்து வந்திருக்கிறேன்...

Updated On : 12 மார்ச், 2020 at 11:00 AM

 இன்னும் ஒரே ஒரு வாய்ப்புதான்....

Updated On : 12 மார்ச், 2020 at 10:59 AM

இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சி அலை உருவாக வேண்டும். ஒரு புரட்சி உருவாக வேண்டும். அவ்வாறு உருவாகும்பட்சத்தில் மற்ற கட்சிகளின் அசுர பலம் காணாமல் போகும். 

Updated On : 12 மார்ச், 2020 at 10:59 AM

 நான் ஒரு துரும்புதான்...

Updated On : 12 மார்ச், 2020 at 10:59 AM

 இந்தப் புரட்சி வெடிக்க வேண்டும்...

Updated On : 12 மார்ச், 2020 at 10:59 AM

 இதை பத்திரிகையாளர்கள் சொல்ல வேண்டும்...

Updated On : 12 மார்ச், 2020 at 10:59 AM

 அந்த அதிசயம் அற்புதம் இங்கே நடைபெற வேண்டும்....

Updated On : 12 மார்ச், 2020 at 10:58 AM

 விவேகாநந்தர் இங்கேதான் மாறினார்...

Updated On : 12 மார்ச், 2020 at 10:58 AM

 அரசியலில் கலைஞரின் வாரிசு என்பதை நிரூபிக்கும் வகையில் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். 

Updated On : 12 மார்ச், 2020 at 10:58 AM

 காந்தி இங்கேதான் உடைகளை மாற்றினார்...

Updated On : 12 மார்ச், 2020 at 10:58 AM

 இது புரட்சிக்கான மண்...

Updated On : 12 மார்ச், 2020 at 10:58 AM

 அதையே நான் விரும்புகிறேன், எதிர்பார்க்கிறேன்...

Updated On : 12 மார்ச், 2020 at 10:57 AM

 அந்த எழுச்சி ஏற்பட்டால் எந்த பலமும் எதிர்த்து தாக்குப் பிடிக்க முடியாது...

Updated On : 12 மார்ச், 2020 at 10:57 AM

திமுகவில் கலைஞர், அதிமுகவில் ஜெயலலிதா இருந்ததற்காகவே அந்த இரு கட்சிகளுக்கும் மக்கள் வாக்களித்தனர்

Updated On : 12 மார்ச், 2020 at 10:57 AM

 இந்த நல்ல சந்தர்ப்பம், எழுச்சி உருவாக வேண்டும்... 

Updated On : 12 மார்ச், 2020 at 10:57 AM

அசுர பலத்துடன் உள்ள திமுக, அதிமுகவை நாம் எதிர்த்து நிற்கிறோம். திமுகவில் கலைஞர், அதிமுகவில் ஜெயலலிதா என இரண்டு பெரிய ஆளுமைகள் இருந்தனர். 

Updated On : 12 மார்ச், 2020 at 10:57 AM

 இருந்த இரு ஆளுமைகளும் இப்போது இல்லை...

Updated On : 12 மார்ச், 2020 at 10:56 AM

 கோழை என்பார்கள், கேலி செய்வார்கள் அல்லவா..

Updated On : 12 மார்ச், 2020 at 10:56 AM

தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆளுமை தேவை. நல்ல ஆளுமை கொண்ட ஒரு தலைவரை கொண்டுவந்து மாற்று அரசியலை ஏற்படுத்த வேண்டும்

Updated On : 12 மார்ச், 2020 at 10:56 AM

 வருவேன் என்று சொல்லிவிட்டு ஒதுங்கினால் என்னென்ன சொல்வார்கள்...

Updated On : 12 மார்ச், 2020 at 10:56 AM

 எவ்வாறு செய்ய முடியும்...

Updated On : 12 மார்ச், 2020 at 10:55 AM

 இவர்களைச் சமாளிக்க முடியுமா, எதிர்கொள்ள முடியுமா

Updated On : 12 மார்ச், 2020 at 10:55 AM

கட்சியின் கொள்கைகள் குறித்து நான் கூறியதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்

Updated On : 12 மார்ச், 2020 at 10:55 AM

 இன்னொரு புறம் ஆட்சி அதிகாரம், கட்டமைப்பு...

Updated On : 12 மார்ச், 2020 at 10:55 AM

 ஒரு பக்கம் பெரிய லெகஸி...

Updated On : 12 மார்ச், 2020 at 10:54 AM

 நாம் எதிர்ப்பது அசுர பலத்துடன் இருக்கும் இரு ஜாம்பவான்கள்...

Updated On : 12 மார்ச், 2020 at 10:54 AM

உண்மைத் தன்மைக்கு எப்போதுமே மதிப்பு உள்ளது. எனவே, கட்சியின் கொள்கைகள் குறித்து மக்களுக்கு முன்னதாகவே தெரிவிக்கிறேன்

Updated On : 12 மார்ச், 2020 at 10:54 AM

 உண்மைக்கு, செல்ப்லெஸ்நெஸ்-க்கு ஒரு பவர் இருக்கிறது...

Updated On : 12 மார்ச், 2020 at 10:53 AM

 கட்சியின் கொள்கைகள் குறித்து இப்போதே ஏன் ரஜினி சொல்கிறார் என்று நினைக்கலாம். ஆனால், வெளிப்படைத்தன்மை மிக அவசியம். 

Updated On : 12 மார்ச், 2020 at 10:53 AM

 கட்சிக்கு ஆரம்பிக்கும்போது சொல்லாமல் இப்போது ஏன் சொல்கிறார்...

Updated On : 12 மார்ச், 2020 at 10:53 AM

 வெளிநாடுகளில் எப்படியெல்லாம் இருக்கின்றன...

Updated On : 12 மார்ச், 2020 at 10:53 AM

 அறிஞர் அண்ணா நான் மதிக்கும் ஒரு நல்ல தலைவர். அவரைப் போன்ற ஒரு தலைவரை உருவாக்க வேண்டும்

Updated On : 12 மார்ச், 2020 at 10:53 AM

 படித்தவர்களைக் கொண்டு வர வேண்டும்

Updated On : 12 மார்ச், 2020 at 10:52 AM

எனக்கு ஒரு மாற்று அரசியல் தேவை; அரசியல் மாற்றம் வேண்டும். நல்ல தலைவர்களை உருவாக்க வேண்டும். 

Updated On : 12 மார்ச், 2020 at 10:52 AM

 நல்ல தலைவர்கள் வேண்டும்

Updated On : 12 மார்ச், 2020 at 10:52 AM

 நல்ல மாற்றம் கொண்டுவர வேண்டும்

Updated On : 12 மார்ச், 2020 at 10:52 AM

 எப்போதும் வெளிப்படையாகப் பேசுகிறேன்

Updated On : 12 மார்ச், 2020 at 10:51 AM

கட்சியில் ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் போன்ற படித்தவர்களை நியமிப்பேன்

Updated On : 12 மார்ச், 2020 at 10:50 AM

 முதல்வர் பதவி வேண்டாம் என்று நான் சொல்வது தியாகமல்ல

Updated On : 12 மார்ச், 2020 at 10:50 AM

முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று என்னிடம் அனைவரும் கூறினர். ஆனால், அதில் எனக்கு விருப்பமில்லை

Updated On : 12 மார்ச், 2020 at 10:50 AM

 நான் சிஎம் கேன்டிடேட் இல்லை என்பதை யாரும் ஏற்கவில்லை

Updated On : 12 மார்ச், 2020 at 10:49 AM

 கட்சித் தலைமையில் உள்ளவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளை ஆட்சித் தலைமை செயல்படுத்துவது கடமை

Updated On : 12 மார்ச், 2020 at 10:49 AM

 மற்றவர்களை அமர வைத்துப் பார்ப்பது மக்களுக்குப் பிடிக்காது என்றார்கள்.

Updated On : 12 மார்ச், 2020 at 10:49 AM

 அழகு பார்ப்பது என்பது எனக்குப் பிடிக்காத வார்த்தை

Updated On : 12 மார்ச், 2020 at 10:48 AM

 இளைஞனாக, படித்தவராக, தொலைநோக்கு பார்வை உள்ளவர்களை அரசியலில் கொண்டுவர வேண்டும்

Updated On : 12 மார்ச், 2020 at 10:48 AM

 முதல்வர் இல்லை என்றால் மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றார்கள்

Updated On : 12 மார்ச், 2020 at 10:48 AM

 50 வயதுக்குக் கீழே என்றால் நம்மிடம் அதைவிடக் கூடுதலானவர்கள் இருக்கிறார்களே.

Updated On : 12 மார்ச், 2020 at 10:47 AM

 பதவிக்காக வருவோர் வேண்டவே வேண்டாம்

Updated On : 12 மார்ச், 2020 at 10:47 AM

 எனக்குத் தெரிந்தவர்கள், நெருக்கமானவர்களிடம் சொன்னேன்

Updated On : 12 மார்ச், 2020 at 10:47 AM

கட்சியில் யார் எந்த தவறு செய்தாலும் சுட்டிக்காட்டுவோம்; அதை சரி செய்யவில்லை எனில் அவர்களை தூக்கி எறிவோம்

Updated On : 12 மார்ச், 2020 at 10:47 AM

 என் மனதுக்குள்ளேயே வைத்திருந்தேன்

Updated On : 12 மார்ச், 2020 at 10:47 AM

 சுவருக்கெல்லாம் காதுகள் இருக்கின்றன

Updated On : 12 மார்ச், 2020 at 10:47 AM

மாற்று அரசியலைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்று நம்புகிறேன்

Updated On : 12 மார்ச், 2020 at 10:46 AM

 சரியாகச் செயல்படாவிட்டால் தூக்கி எறிவோம்

Updated On : 12 மார்ச், 2020 at 10:45 AM

 கட்சித் தலைவர் என்பவர் கண்காணிக்க வேண்டும்

Updated On : 12 மார்ச், 2020 at 10:45 AM

 தன்மானம் உள்ளவர்களை உட்கார வைப்போம்

Updated On : 12 மார்ச், 2020 at 10:44 AM

சோ உள்பட தலைவர்கள் பலரும் எல்லாரும் என்னை அழைத்தார்கள்.

Updated On : 12 மார்ச், 2020 at 10:44 AM

தேவையான அளவு மட்டுமே கட்சி நிர்வாகிகள் 

இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்க முடிவு 

கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது எனது முடிவு 

Updated On : 12 மார்ச், 2020 at 10:44 AM

 முதல்வர் பதவியை என்னால் நினைத்தும் பார்க்க முடியாது

Updated On : 12 மார்ச், 2020 at 10:44 AM

 வல்லுநர்கள் குழு அமைத்து வாக்குறுதிகளைச் செயல்படுத்த வேண்டும்

Updated On : 12 மார்ச், 2020 at 10:43 AM

 வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

Updated On : 12 மார்ச், 2020 at 10:43 AM

 கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை

Updated On : 12 மார்ச், 2020 at 10:43 AM

 ஆட்சியில் இருப்பவர்களைக் கட்சியில் இருப்போர் கேள்வி கேட்க முடியாது.

Updated On : 12 மார்ச், 2020 at 10:43 AM

எல்லா கட்சிகளிலும் ஆட்சிக்கும் தலைவர், கட்சிக்கும் தலைவர் என்ற நிலை

Updated On : 12 மார்ச், 2020 at 10:42 AM

 அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை வைத்துள்ளேன். தேர்தலில் போட்டியிட 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கே முன்னுரிமை

Updated On : 12 மார்ச், 2020 at 10:42 AM

 புது சக்தி சட்டமன்றத்துக்குள் செல்ல வேண்டும், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்

Updated On : 12 மார்ச், 2020 at 10:41 AM

சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களுக்குத் தேர்தலில் வாய்ப்பு

Updated On : 12 மார்ச், 2020 at 10:40 AM

2017-ம் ஆண்டிற்கு முன்பு நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறியதில்லை. எனவே, 26 ஆண்டுகளாகரஜின அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்று கூறுவது தவறு. 2017 டிசம்பர் 1ம் தேதி தான் நான் அரசியலுக்கு வருவதாகக் கூறினேன். 

Updated On : 12 மார்ச், 2020 at 10:38 AM

கடந்த செய்தியாளர் சந்திப்பில் எனக்கு ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை என்று கூறினேன். பல விஷயங்கள் அதுகுறித்து செய்தியாக வந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே இந்த செய்தியாளர் சந்திப்பு. 

மாவட்டச் செயலர்கள் நாங்கள் ஆலோசித்தது குறித்து வெளியே கூறவில்லை. அதற்கு என் மனமார்ந்த நன்றி.

Updated On : 12 மார்ச், 2020 at 10:32 AM

ரஜினி செய்தியாளர் சந்திப்பு லைவ்

 ரஜினி செய்தியாளர் சந்திப்பு ரஜினியின் அதிகாரப்பூர்வ யூ ட்யூப் பக்கத்தில் விடியோ லைவ் செய்யப்படுகிறது. www.youtube.com/channel/UC-pxpcgc1VOfLATY5tf2xQg/live

Updated On : 12 மார்ச், 2020 at 10:13 AM

வீட்டில் இருந்து புறப்பட்டார் ரஜினிகாந்த்

காலை 10 மணியளவில் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து கிளம்பிய  ரஜினிகாந்த் அங்கு கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். 

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் லீலா பேலஸூக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். 

Updated On : 12 மார்ச், 2020 at 1:21 AM

1960-70களில் நடந்த புரட்சி மீண்டும் தமிழகத்தில் நடக்க வேண்டும்: ரஜினி ஆவேசம்!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி கொள்கைகள் குறித்துப் பேசினார். அப்போது, 1960-70களில் நடந்த புரட்சியைப் போன்று மீண்டும் ஒரு புரட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று கூறினார். மேலும் விரிவான செய்திக்கு..

Updated On : 12 மார்ச், 2020 at 1:20 AM

ரசிகர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை: ரஜினிகாந்த்

நாம், சினிமா புகழ், ரசிகர்களை வைத்துக்கொண்டு ஜெயிக்க முடியுமா? அரசியலுக்கு வருவது என்ன சாதாரண விஷயமா? என்னைநம்பி வருவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. இந்த வயதில் இதெல்லாம் எனக்கெல்லாம் தேவையில்லை என்று ரஜினி கூறினார். மேலும் விரிவான செய்திக்கு..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.