அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்
கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!
தில்லியில் மேலும் 6,715 பேருக்கு கரோனா
தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,715 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 621 பேருக்கு கரோனா : மாவட்டவாரியாக
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,727 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
Advertisement
ரஷியாவில் மேலும் 19,404 பேருக்கு கரோனா
ரஷியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
தில்லியில் மேலும் 6,842 பேருக்கு கரோனா
தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 6,842 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் மேலும் 8,516 பேருக்கு கரோனா
கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 8,516 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் மேலும் 2,487 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 2,487 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
நல்ல செய்தி: நாட்டில் இன்று கரோனாவிலிருந்து 58,323 பேர் மீண்டனர்
நாட்டில் புதிதாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரமாக இருக்கும் நிலையில், அதிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரமாக உள்ளது. விரிவான செய்திக்கு..
கேரள அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 57 வயதான நபர் அங்கு திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விரிவான செய்திக்கு..
தில்லி கரோனா நிலவரம்: மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு
தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இது தொடா்பாக மத்திய உள்துறை, சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினா். விரிவான செய்திக்கு..
96 வயதில் கரோனாவை வென்ற மூதாட்டி!
ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டிருந்த 96 வயது மூதாட்டி ஒருவா் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா். விரிவான செய்திக்கு..
ஆந்திரத்தில் 2,849, கர்நாடகத்தில் 2,756 பேருக்கு கரோனா
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.விரிவான செய்திக்கு..
சென்னையில் 669 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,766 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தில்லியில் ஒரேநாளில் 6,725 பேருக்கு கரோனா
தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 6,725 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 2,435 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 2,435 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..
கேரளத்தில் மேலும் 6,862 பேருக்கு கரோனா
கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 6,862 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..