முகப்பு
சிறப்புச் செய்திகள்

பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..

Updated On : 8 அக்டோபர், 2020 at 10:43 AM
பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்
பகிர்:
Updated On : 12 அக்டோபர், 2020 at 8:57 AM

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

Updated On : 12 அக்டோபர், 2020 at 8:57 AM

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,667 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 3,667 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
Updated On : 12 அக்டோபர், 2020 at 8:55 AM

மகாராஷ்டிரத்தில் புதிதாக 7,000 பேருக்கு மட்டுமே கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 7,089 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Advertisement

Updated On : 12 அக்டோபர், 2020 at 7:44 AM

கேரளத்தில் புதிதாக 5,930 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 5,930 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
 
Updated On : 12 அக்டோபர், 2020 at 7:43 AM

தமிழகத்தில் புதிதாக 4,879 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 4,879 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
 
Updated On : 12 அக்டோபர், 2020 at 6:35 AM

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,592 ​பேருக்கு கரோனா

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,592 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 125 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

 
Updated On : 12 அக்டோபர், 2020 at 6:34 AM

சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோர் 13,751-ஆக அதிகரிப்பு!

சென்னையில் 7 மண்டலங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விரிவான செய்திக்கு..

Updated On : 11 அக்டோபர், 2020 at 11:26 AM

சென்னையில் 6 மண்டலங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில்..

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 13,577 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 11 அக்டோபர், 2020 at 9:57 AM

கேரளத்தில் ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

கேரளத்தில் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 
Updated On : 11 அக்டோபர், 2020 at 5:49 AM

ரஷியாவில் அதிகரித்து வரும் ஒருநாள் பாதிப்பு - 13,634 பேருக்கு தொற்று; 149 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,634 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 149 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

Updated On : 11 அக்டோபர், 2020 at 4:45 AM

கரோனா: ஒரே நாளில் 918 போ் உயிரிழப்பு; பாதிப்பு 70,53,807 ஆக உயர்வு

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 918-க்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். புதிதாக 74,343 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
Updated On : 10 அக்டோபர், 2020 at 11:51 AM

நாட்டில் கரோனா பாதிப்பு 69,79,424: பலி 1,07,416 ஆக அதிகரிப்பு

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69 லட்சத்து 79 ஆயிரத்து 424 ஆக  உயர்ந்துள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 73,272 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
 
சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 926 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,07,416 ஆக அதிகரித்துவிட்டது. இது மொத்த கரோனா பாதிப்பில் 1.54 சதவீதமாகும். இதுவரை 59,88,823 போ் கரோனா தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனா். ஒரே நாளில் 82,753 பேர் தொற்றில் இருந்து விடுப்பட்டுள்ளனர். இப்போதைய நிலையில் 8,83,185 போ் நாட்டில் கரோனா பாதிப்புடன் உள்ளனா். இது 12.65 சதவீதமாகும். சுமாா் ஒரு மாதத்துக்குப் பிறகு நாட்டில் கரோனா தொற்றுடன் இருப்போா் எண்ணிக்கை 9 லட்சத்துக்குகீழ் குறைந்துள்ளது.
 
மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 39,732 போ் கரோனாவால் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 9,789 பேரும், ஆந்திர மாநிலத்தில் 6,159 பேரும், தில்லியில் 5,692 பேரும் கரோனாவால் பலியாகினா்.
Updated On : 10 அக்டோபர், 2020 at 11:48 AM

கரோனா: உலக அளவில் 3.70 கோடி பேர் பாதிப்பு: 10.72 லட்சம் பேர் பலி

உலக அளவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3.70 கோடியாக உயர்ந்துள்ளது. 
 
உலக நாடுகளிலேயே அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகளில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான தினசரி கரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 2-ஆம் தேதிதான் உலக அளவில் அதிகபட்ச தினசரி கரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டது. அந்த நாளில் மட்டும் 3,30,340 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில், சா்வதேச அளவில் இதுவரை 3,70,93,523 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 72 ஆயிரத்து 158 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 2, கோடிய 78 லட்சத்து 85 ஆயிரத்து 855 பேர் குணமடைந்துள்ளனர். 
Updated On : 10 அக்டோபர், 2020 at 6:30 AM

பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்துக்கும் குறைவாக பாதிப்பு: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 3,970 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
Updated On : 10 அக்டோபர், 2020 at 6:10 AM

தமிழகத்தில் புதிதாக 5,242 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 5,242 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 9 அக்டோபர், 2020 at 9:38 AM

மகாராஷ்டிரத்தில் 15 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

 மகாராஷ்டிரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 12,134 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 9 அக்டோபர், 2020 at 7:46 AM

தில்லியில் புதிதாக 2,860 பேருக்கு கரோனா

 தில்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 2,860 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 9 அக்டோபர், 2020 at 6:32 AM

தமிழகத்தில் மேலும் 5,185 பேருக்கு கரோனா

 தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 5,185 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  விரிவான செய்திக்கு..

Updated On : 8 அக்டோபர், 2020 at 12:54 PM

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 3,16,934 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் புதிதாக 583 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 3,16,934 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 
Updated On : 8 அக்டோபர், 2020 at 10:46 AM

உலகளவில் கரோனா பாதிப்பு 3.63 கோடி: பலி 10.60 லட்சமாக உயர்வு

 உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று பாதிப்புக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,74,08,529 பேர் குணமடைந்துள்ள நிலையில், 10,60,443 பேர் உயிரிழந்துள்ளனர். 

வியாழக்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 3,63,91,057 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2,74,08,529 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 10,60,443 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 79,25,088    பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 67,426 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

Updated On : 8 அக்டோபர், 2020 at 10:45 AM

கரோனா தொற்றுக்காக சீனா அதிக விலை கொடுக்க நேரிடும்: டொனால்ட் டிரம்ப்

 கரோனா நோய்த்தொற்றை உருவாக்கி அமெரிக்கா மற்றும் உலகத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியதற்காக சீனா அதிக விலையை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த்தொற்றை உருவாக்கி பரவவிட்டது சீனா தான் என்று குற்றம்சாட்டிய டிரம்ப், அவர்கள் உலகத்திற்காக செய்த இந்த காரியத்திற்காக அதிக விலையை கொடுக்க நேரிடும். விரிவான செய்திக்கு..

Updated On : 8 அக்டோபர், 2020 at 10:45 AM

கரோனாவைக் கையாள்வதில் டிரம்ப் நிர்வாகம் பெருந்தோல்வி: கமலா ஹாரிஸ்

 கரோனா நோய்த் தொற்றை அதிபர் டிரம்ப் நிர்வாகம் கையாண்ட விதம்  மிகப் பெருந்தோல்வி என்று ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 8 அக்டோபர், 2020 at 10:44 AM

நாட்டில் கரோனா பாதிப்பு 68 லட்சம்: பலி 1,05,526 ஆக அதிகரிப்பு

புது தில்லி: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68 லட்சமாக உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 78,524 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 971 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,05,526 ஆக அதிகரித்துவிட்டது. இது மொத்த கரோனா பாதிப்பில் 1.54 சதவீதமாகும்.

புதிதாக 78,524  பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த கரோனா பாதிப்பு68,35,656 ஆக அதிகரித்துவிட்டது. எனினும், இதுவரை 58,27,705 போ் கரோனா தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 85.25 சதவீதமாகும். இப்போதைய நிலையில் 9,02,425 போ் கரோனா தொற்றுடன் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 13.30 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி அக்டோபா் 6-ஆம் தேதி வரை 8,34,65,975 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் புதன்கிழமை மட்டும் 11,94,321 பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 39,072 போ் கரோனாவால் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 9,574 பேரும், ஆந்திர மாநிலத்தில் 6,349பேரும், தில்லியில் 5,616 பேரும் கரோனாவால் பலியாகினா்.

தொற்று பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. ஆந்திரம் இரண்டாவது இடத்திலும், கர்நாடகம் மூன்றாவது இடத்திலும், தமிழ்நாடு நான்காவது இடத்திலும் இருந்து வருகிறது.

Updated On : 8 அக்டோபர், 2020 at 10:44 AM

நாட்டில் இதுவரை 8,34 கோடி கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர் 

 நாட்டில் இதுவரை 8.34 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Updated On : 8 அக்டோபர், 2020 at 6:14 AM

தமிழகத்தில் மேலும் 5,088 பேருக்கு கரோனா

 தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 5,088 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

Updated On : 8 அக்டோபர், 2020 at 6:06 AM

தேவை எச்சரிக்கை: சென்னையில் நோயாளிகள் எண்ணிக்கை 13,000-ஐ தாண்டியது

 சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 13,110 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். விரிவான செய்திக்கு..

Updated On : 8 அக்டோபர், 2020 at 6:05 AM

சென்னையில் தகரம் அடிப்பது நிறுத்தம்: சென்னை மாநகராட்சி

 சென்னையில் கரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தகரம் அடிப்பது 25 நாள்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர்  தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

Updated On : 8 அக்டோபர், 2020 at 6:05 AM

17-வது நாளாக, 10 லட்சத்துக்கு கீழ் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை

 கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 17 நாள்களாக 10 லட்சத்துக்கும் கீழ் உள்ளது. நாட்டில் தற்போது 9,02,425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரிவான செய்திக்கு..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.