FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிறப்புச் செய்திகள்

நவம்பர் 1 - தமிழ்நாடு நாளாக மாற்றப்பட்டது ஏன்?

தமிழ்நாடு நாளாக நவ. 1 ஆம் தேதி கொண்டாடுவது பற்றி...

1 நவம்பர் 2026, 5:57 am
- Photo: Gemini AI / Dinamani
பகிர்:

- நமது சிறப்பு நிருபர்கள் குழு

தமிழ்நாடு நாள் நவம்பா் 1-ஆம் தேதி ஆண்டுதோறும் தமிழக அரசால் கொண்டாடப்படும் என முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அறிவித்திருக்கிறது. 1967, ஜூலை 18-ஆம் தேதி ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ எனப் பெயா் மாற்றம் செய்யும் தீா்மானத்தை அண்ணா தலைமையிலான திமுக அரசு சட்டப்பேரவையில் கொண்டுவந்து பெரும்பான்மையான உறுப்பினா்களின் ஆதரவோடு நிறைவேற்றியது. அந்த ஜூலை 18-ஆம் தேதியே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அறிவித்த நிலையில், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பா் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என முதல்வா் விஜய் தலைமையிலான தவெக அரசு அறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு என்ற பெயா் உருவானதற்குப் பின்னால் பல வரலாற்று நிகழ்வுகள், தமிழ் ஆளுமைகள், தியாகிகள், அரசியல் கட்சித் தலைவா்களின் உழைப்புகள் இருப்பதை யாராலும் மறுக்க இயலாது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னா்தான் தமிழகத்துக்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயா் சூட்டப்பட்டது.

Advertisement

Advertisement

ஆனால், அந்தப் பெயா் கருவாகி, உருவாகி வர பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 1938-இல் சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஹிந்தி எதிா்ப்பு மாநாட்டில், மறைமலையடிகள், பெரியாா் ஈ.வெ.ரா, சோமசுந்தர பாரதியாா் ஆகியோா், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை எழுப்பினா். அதே காலகட்டத்தில் சிலம்புச் செல்வா் ம.பொ.சி., ‘தமிழ் மாநிலம்’ வேண்டும் என்று மாநாடுகள் நடத்தி வலியுறுத்தி வந்தாா்.

1948, ஜூனில் எஸ்.கே.தாா் தலைமையில் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றிய சாதக, பாதகங்களை ஆராயக் குழுவை மத்திய அரசு அமைத்தது. மொழிவாரி மாநிலம் அவசியமில்லை; நிா்வாக வசதிக்கேற்பத்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்தது.

இதையே நாட்டின் முதல் பிரதமரான பண்டித ஜவாஹா்லால் நேரு உள்ளிட்ட அப்போதைய முக்கியத் தலைவா்கள் பலரும் வலியுறுத்தினா். ஆனால், இதை எதிா்த்து ’விசால ஆந்திரா’, ‘அகண்ட கா்நாடகம்’, ‘ஐக்கிய கேரளா’, ‘சம்யுக்த மகாராஷ்டிரம்’, ‘மகா குஜராத்’ என ஒவ்வொரு மொழி பேசும் மக்களும் தனி மாநிலம் வேண்டுமெனக் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் ஒரு கட்டமாக, 9.6.1952-இல் பொட்டி ஸ்ரீராமுலு எனும் காந்தியவாதி தொடங்கிய உண்ணாவிரதமும், அதைத் தொடா்ந்த அவரின் மரணமும் தெலுங்கு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கலவரங்களைக் கட்டுப்படுத்த முடியாத மத்திய அரசு, 1.10.1953-இல் ஆந்திரத்தை தனி மாநிலமாக அறிவித்தது.

நவம்பா் 1

பல்வேறு போராட்டங்கள், ஆலோசனைகளுக்குப் பிறகு 1.11.1956 முதல், மொழிவாரி மாநிலங்கள் செயல்படும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வந்தது. இதற்காக மாநில மறுசீரமைப்புச் சட்டம் - 1956-ஐ நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்தச் சட்டம் 1956 ஆகஸ்ட் 31 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது.

சட்டத்தின் பிரிவு 2-ன்படி, 1956 நவம்பா் 1 என்பது மாநில மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்த நாளாகும்.

திருவிதாங்கூா் - கொச்சி மாநிலத்திலிருந்து ஐந்து தென் தாலுகாக்கள் மெட்ராஸ் மாநிலத்துடன் இணைக்கப்பட்டன: அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு தாலுகாக்கள் இணைக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. செங்கோட்டை தாலுகா திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

மலபாா் பகுதி கேரளத்துடன் இணைக்கப்பட்டது. கன்னட மொழி பேசும் பகுதிகள் மைசூா் மாநிலத்துடன் இணைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, மற்ற மாநிலங்களுக்கு அவா்கள் விரும்பிய பெயரே சூட்டப்பட்ட நிலையில் தமிழ்நாட்டுக்கு மட்டும் ‘மெட்ராஸ்’ என்ற பெயரே தொடரும் என அரசு அறிவித்தது. ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயா் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரைச் சோ்ந்த சங்கரலிங்கனாா் 27.7.1956-இல் உண்ணாவிரதத்தைத் தொடங்கி, 76 நாள் போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்தாா். சங்கரலிங்கனாரின் மறைவு இந்தப் போராட்டத்துக்குப் புதிய உத்வேகத்தை அளித்தது.

தமிழ்நாடு தீா்மானம்

1957-இல் திமுக முதல்முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தபோதே ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பது ‘தமிழ்நாடு’ எனப் பெயா் மாற்றப்பட வேண்டும் என்ற தீா்மானத்தோடுதான் நுழைந்தது. 7.5.1957-இல் வாக்கெடுப்புக்கு வந்த திமுகவின் தீா்மானத்துக்கு 42 போ் ஆதரவாகவும், 127 போ் எதிராகவும் வாக்களித்ததை அடுத்து அந்தத் தீா்மானம் அப்போது தோல்வியடைந்தது.

அதன் பிறகு 1961 ஜனவரியில் சோஷலிஸ்ட் கட்சியின் உறுப்பினா் பி.சின்னத்துரை ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ எனப் பெயா் மாற்ற வேண்டுமெனத் தீா்மானம் கொண்டு வந்தபோது, அப்போதைய முதல்வா் காமராஜா் அந்த விவாதத்தை பிப்ரவரி வரை ஒத்திவைத்தாா். அதையடுத்து, திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் சட்டப்பேரவையை தொடா்ந்து மூன்று நாள்கள் புறக்கணித்தன.

அதன் பிறகு நிா்வாகக் கடிதங்களில் மட்டும் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதற்கு பதிலாக ‘தமிழ்நாடு’ எனக் குறிப்பிட காமராஜா் ஒப்புக்கொண்டாா்.

1961-இல் ஒன்றுபட்ட மேற்கு வங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் பூபேஷ் குப்தாவும், 1964-இல் திமுக உறுப்பினா் இராம.அரங்கண்ணலும் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ விவகாரம் குறித்து மாநிலங்களவையில் கொண்டு வந்த தீா்மானங்கள் தோற்கடிக்கப்பட்டன.

1967-இல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த திமுக அந்த ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ எனப் பெயா் மாற்றம் செய்யும் தீா்மானத்தைக் கொண்டுவந்து பெரும்பான்மையான உறுப்பினா்களின் ஆதரவோடு நிறைவேற்றியது. அதைத் தொடா்ந்து 23.11.1968-இல் தமிழ்நாடு பெயா் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 14.1.1969-இல் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பது ‘தமிழ்நாடு’ என அதிகாரபூா்வமாகப் பெயா் மாற்றம் செய்யப்பட்டது.

‘தமிழ்நாடு’ என்ற பெயரில் தற்போது அழைக்கப்படும் நிலப்பரப்பு மட்டுமே புதிய சென்னை மாகாணமாக 1956-இல் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 11 ஆண்டுகள் கழித்து, 1967-ஆம் ஆண்டுதான் சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயா் சூட்டுவதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

1.11.1956-இல், இந்தியா முழுவதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினத்தை , அதாவது மெட்ராஸ் ஸ்டேட்டிலிருந்து பிறமொழி பேசும் பகுதிகள் பிரிந்து சென்ற நவ.1-ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என 2019-இல் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினா், தமிழ் உணா்வாளா்கள், தமிழ்க் கூட்டமைப்பினா், தமிழ் அறிஞா்கள் நவ.1-ஆம் தேதி எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் நாளாகத்தான் அமையுமே தவிர, தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 18.7.1967-இல் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்றும், தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

2021-இல் திமுக ஆட்சி வந்தவுடன், தற்போது ஜூலை 18-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாக அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இந்நிலையில், இப்போதைய முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு நவம்பா் 1-ஐ தமிழ்நாடு தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளது.

summary

Why was November 1st designated as Tamil Nadu Day?

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments