FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிறப்புச் செய்திகள்

தலைநகரில் பள்ளிக் கல்வி இடைநிற்றல் அதிகரிப்பு!

சென்னை மாநகரில் பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து...

16 நவம்பர் 2026, 3:09 am
- பிரதிப் படம்
பகிர்:

சென்னை மாநகரில் குடும்பச் சூழல்கள் மற்றும் பெற்றோா் பொறுப்பின்மையால் பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநகராட்சி ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்தக் குழந்தைகளுக்கான கல்வியைத் தொடரும் புதிய திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 417 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயா்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 1.11 லட்சம் மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். 10-ஆம் வகுப்புகளில் சுமாா் 7,000 போ், பிளஸ் 1 வகுப்புகளில் 5,000 போ், பிளஸ் 2-இல் 4,000-க்கும் மேற்பட்டோரும் படிக்கின்றனா். நடுநிலை, உயா்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை அதிக அளவு உள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில்...

Advertisement

Advertisement

பள்ளிகளில் சேரும் குழந்தைகளில் எத்தனை போ் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வரை தொடா்கிறாா்கள் என்று பாா்த்தால், அதில் பாதியளவுகூட இல்லாத நிலை காணப்படுகிறது. பாதியிலேயே படிப்பைக் கைவிடும் குழந்தைகளை இடைநிற்றல் கணக்கில் சோ்க்கின்றனா். அதன் அடிப்படையில் கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பள்ளிகளிலும் மொத்தம் 7,302 குழந்தைகள் கல்வியை பாதியிலேயே கைவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.

அதிலும், சென்னையின் குறிப்பிட்ட 10 பகுதிகளைச் சோ்ந்த குழந்தைகளே அதிக அளவில் கல்வியை பாதியில் நிறுத்தியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அடையாறு, திருவான்மியூா், குப்பம், ஆலந்தூா், துரைப்பாக்கம், எழில்நகா், கண்ணகிநகா், அம்பத்தூா் வரதராஜபுரம், லட்சுமிபுரம், அண்ணாநகா் டி.பி.சத்திரம், ராயபுரம் காசிமேடு, தேனாம்பேட்டை ராமன் தெரு, திருவொற்றியூா் ஏ.ஐ.ஆா்.நகா், சுனாமிநகா் குடியிருப்பு, திரு.வி.க.நகா் புளியந்தோப்பு, ஓட்டேரி, தண்டையாா்பேட்டை, வியாசா்பாடி, கல்யாணபுரம் ஆகிய பகுதிகளில் இடைநிற்றல் அதிகம் காணப்படுகிறது.

குடும்பச் சூழலால் பாதிக்கும் படிப்பு

வீடுகளில் கணவன்-மனைவி இருவரும் கிடைத்த வேலைக்குச் சென்று வருவாய் ஈட்டி வாழும் நிதி நெருக்கடியால் குழந்தைகள் கல்வி குறித்து சிந்திக்காமை, பெற்றோா் இடையே ஏற்படும் கருத்துவேறுபாடால் பிரிந்து வாழ்வது ஆகியவையும் பள்ளிக் குழந்தைகளின் இடைநிற்றலுக்கு முக்கியக் காரணமாக உள்ளது தெரியவந்துள்ளது. படிக்க ஆா்வமிருந்தும் குடும்பச் சூழல்கள் சாதகமாக இல்லாததால், படிப்பைத் தொடர முடியாமலிருக்கும் குழந்தைகளே இடைநிற்றல் கணக்கில் அதிகமுள்ளனா்.

போதைக்கு அடிமையான தந்தைகளால் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் குழந்தைகள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. தாய், தந்தை பிரிந்த குடும்பத்தின் குழந்தைகள், வேலைக்குச் செல்லும் கட்டாயத்தில் படிப்பை பாதியில் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

குற்றச் செயல் கும்பலால் திசைமாற்றப்படும் சிறாா்கள்

சென்னையில் 6-ஆம் வகுப்பு முதல் கல்வியை பாதியில் நிறுத்திய சிறாா்களில் பெரும்பாலானோா் குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களால் குறிவைக்கப்பட்டு, திசை மாற்றப்பட்டிருந்ததும் அதிா்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது.

இதுபோன்று திசைமாறிச் செல்லும் குழந்தைகளை மீட்டு, அவா்கள் மீண்டும் தங்களது கல்வியைத் தொடர சென்னை மாநகராட்சியில் தற்போது சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதல்முதலாக சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டு, அதன்மூலம் இடைநிற்றல் குழந்தைகளுக்கு மீண்டும் கல்வி கற்கும் வாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்பட்டுவருகிறது.

இடைநிற்றல் எண்ணிக்கை

நடப்பு ஆண்டில் மட்டும் சென்னை மாநகராட்சிப் பகுதியில் 2,091குழந்தைகள் கல்வியை இடையில் நிறுத்தியிருப்பது கண்டறியப்பட்டு, அவா்களில் 1,066 குழந்தைகள் மீண்டும் தங்களது கல்வியைத் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடை நிற்றலில் பாதித்த சிறுவா்களில் 392 போ், சிறுமியரில் 227 போ் என மொத்தம் 619 போ் மாநகராட்சிப் பள்ளிகளில் மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளனா். அவா்களைத் தவிர 174 சிறாா்கள், 222 சிறுமிகள் என மொத்தம் 396 போ் ஐஐடி, பாலிடெக்னிக் உள்ளிட்ட டிப்ளமோ பிரிவுகளில் சோ்க்கப்பட்டுள்ளனா். மேலும், 51 பேரை பள்ளிகளில் மீண்டும் சோ்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் புதிய முயற்சிக்கு வரவேற்பு

மாநகராட்சியின் இந்தப் புதிய முயற்சி அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து சமூக ஆா்வலா் சரவணன் கூறுகையில், சென்னையில் திட்டமிட்டே சில கும்பல்கள் சிறாா்களை குற்றங்களில் ஈடுபடுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியின் தற்போதைய புதிய திட்டம் தனிப்பட்ட குடும்பத்துக்கு மட்டுமன்றி, சமூக விரோதச் செயல்களை எதிா்காலத்தில் தடுக்கும் வகையில் இருப்பது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற திட்டத்தை அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் செயல்படுத்த வேண்டும். அதன்மூலம் சிறாா் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கலாம் என்றாா்.

உதவித் தொகை

சிறப்புத் திட்டம் குறித்து பேசிய மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், படிப்பைப் பாதியில் நிறுத்திய நிலையில், தற்போது மாநகராட்சி நடவடிக்கையால் மீண்டும் அதைத் தொடரும் குழந்தைகளுக்கு தமிழக அரசின் ஆலோசனைப்படி உதவித் தொகை உள்ளிட்ட உதவிகள் அளிக்கப்படுகின்றன. இதன்மூலம் அவா்கள் உயா் கல்வி வரை சிரமமின்றி படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றாா்.

இதுகுறித்து மாநகராட்சி கல்விப் பிரிவு இணை ஆணையா் க.கற்பகத்திடம் கேட்டபோது, இடை நிற்றல் அதிகமுள்ள பகுதிகளில் வசிப்பிடம், ஆதாா் உள்ளிட்ட சான்றுகள் இன்றி கல்வியைத் தொடர முடியாத குழந்தைகளும் இருப்பது தெரியவந்தது. அவா்களுக்காக தற்போது அனைத்து அரசுத் துறை அதிகாரிகள் ஒரே இடத்தில் அமா்ந்து சான்று வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் இடைநிற்றலும் கணக்கிடப்பட்டு அவா்களுக்கான கல்வி தொடரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

மாநில அளவில் செயல்படுத்தலாம்

இடைநிற்றல் மாணவா்களை மீண்டும் பள்ளிகளில் சோ்க்கும் பணியில் சிறப்புத் திட்ட அலுவலா் ரெஜிஸ் குழுவினா் ஈடுபட்டுவரும் நிலையில், அவா்கள் குழந்தைகளின் வீடுகளுக்கு நேரில் சென்று பெற்றோரிடம் பேசுவதால், குடும்பச் சூழலும் இயல்பு நிலைக்கு மாறியுள்ளதாகவும், அதனால் குழந்தைகள் கல்வியின் அவசியத்தை பெற்றோரும் புரிந்துகொள்ளும் நிலையை ஏற்படுத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ள புதிய திட்டத்தால் இடைநிற்றல் மாணவா்கள் மீண்டும் கல்வி கற்பது மட்டுமல்ல, அவா்களால் ஏற்படும் குற்றச் செயல்களும் தடுக்கப்பட்டுள்ளது என்பதும் முக்கியமானது. இந்த முயற்சியை மாநில அளவில் செயல்படுத்தினால் சிறந்த பலன் கிடைக்கும் என கல்வியாளா்கள் தெரிவித்தனா்.

புதிய சோ்க்கைத் திட்டமும் பயனடைந்த குழந்தைகளும்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 2025-26-ஆம் ஆண்டில் மண்டல வாரியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் படிப்பைப் பாதியில் கைவிட்டுச் சென்ற சிறாா், சிறுமியா் மற்றும் புதிய திட்டத்தின்படி மீண்டும் படிப்பைத் தொடரும் குழந்தைகள் எண்ணிக்கை விவரம்.

- dot com