FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

வீக் எண்ட் ஜோக்ஸ்! கொஞ்சமாச்சும் சிரிங்க!

'தலைவருக்கு இருக்கிற ஒரு கெட்ட பழக்கம் இது ஒண்ணுதான்...'

Updated On : 20 ஏப்ரல் 2019, 2:22 pm IST
பகிர்:

'தலைவருக்கு இருக்கிற ஒரு கெட்ட பழக்கம் இது ஒண்ணுதான்...'
'என்ன?'
'மீட்டிங்குக்கு வந்ததும் மேடையில் குறட்டை விட்டுத் தூங்குவாரு'

- அ.செல்வகுமார், சென்னை-19.

**

'வாக்களித்ததும் ஒப்புகைச் சீட்டைக் கட்டாயம் பெறணுமாம்'
'ஆத்தாடி... இனி காசு கொடுத்தவனெல்லாம்  பில்லு கேட்பானே... என்ன பண்றது?'

Advertisement

Advertisement

எம்.அசோக் ராஜா, அரவக்குறிச்சி.

தலைவர் ரொம்ப அப்பாவியா இருக்காரே?'
ஆமா... வாக்கு வங்கிக்கு ஏடிஎம் எல்லாம் இருக்கான்னு கேட்குறாரு'

- ஆர்.எம்.வடுகநாதன், வேதாரண்யம்.

'தலைவர் இனி எலக்ஷன்லேயே நிக்கமாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டாராமே?'
'அப்புறம் அவருக்கு விழ இருந்த தன்னோட ஒரு ஓட்டையும் தவறிப் போய் 
வேற சின்னத்துல போட்டுட்டாரே'

- வ.வெற்றிச்செல்வி, வேதாரண்யம்.

'தலைவர் போதையில் பேசுறாருன்னு எப்படிச் சொல்றே?'
'குடிக்க சோடா பாட்டில் கொடுத்தா அதை வாங்கி மைக்-கினு நினைச்சி பேசுறாரு'

- பி.சி.ரகு, பள்ளிச்சேரி.

'அவர் ரொம்ப புத்திசாலின்னு ஏன் சொல்றே?'
'எல்லா  கட்சிகளின் கரைவேட்டிகளையும் வாங்கி வைத்துக் கொண்டு ஒவ்வொரு 
நாளும் ஒவ்வொரு கட்சி கூட்டத்துக்குச் சென்று  பணம்   சம்பாதித்து வருகிறாரே'

- அ.குணசேகரன், புவனகிரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments