jokes 
தற்போதைய செய்திகள்

கடி ஜோக்ஸ்

ஊசி போடுற மாடல் ஜாக்கெட் தைக்கணுமா? புரியலையே

DIN

"ஊசி போடுற மாடல் ஜாக்கெட் தைக்கணுமா? புரியலையே...''
"ஜாக்கெட் கையிலே பெரிய ஓட்டை வச்சுத் தைச்சுக் கொடுங்க''

விஜயா சுவாமிநாதன், திருச்சி.

"அவர் மாதத்துக்கு எப்படியும் பத்து பதினைந்து படத்துக்குப் பூஜை போட்டுடுவாரு''
"அவ்வளவு பெரிய டைரக்டரா?''
"இல்லை... நல்ல சாஸ்திரிகள்''

- ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.

"பொண்ணுக்கு ஆடத் தெரியுமா? பாடத் தெரியுமா?''
"அதுக்கு முன்னாடி உங்க பையனுக்குச் சமைக்கத் தெரியுமான்னு சொல்லுங்க''

- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

"ஒரே தொடர் கனவா வருது''
"எப்படி தொடர் கனவுன்னு சொல்றே?''
"எபிசோட் நம்பர் போட்டு வருதே''

- ஏ.நாகராஜன், பம்மல்.

"ஏங்க... பக்கத்து வீட்டுக்காரரு வாக்கிங் போக  கூப்புடுறாரு''
"முடியாது. வாக்கிங்  போகும் போது சமையல் எப்படிச் செய்றதுன்னு உயிரை வாங்குவாரு''

- ம.வேதவள்ளி, பொரவச்சேரி.

"அறைகூவலை ஏன் பாதியிலேயே நிறுத்திட்டார்?''
 "அரை' கூவலாம்''

- என்.பர்வதவர்த்தினி, சென்னை-75.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT