FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கடி ஜோக்ஸ்தான் சிரிக்காதீங்க!

ஏம்பா இட்லி தோசை ரெண்டுமே இல்லைன்னு சொல்றே?

31 ஜனவரி 2024, 4:02 pm IST
பகிர்:

ஏம்பா இட்லி தோசை ரெண்டுமே இல்லைன்னு சொல்றே?

என்ன சார் பண்ணறது நேத்து சாப்பிட்ட எல்லோரும் பில்லுக்கு கரெக்டா காசு குடுத்துட்டாங்களே!

**

Advertisement

Advertisement

பல் டாக்டரிடம் ஒருவன் - காது வலிக்கு நீங்க தானே டாக்டர்?

டாக்டர் : அவர் பக்கத்து ரூம்ல இருக்கார். அப்படியே நீங்க கண் டாக்டரையும் பாத்துடுங்க

**

எல்லோரும் தான் சாப்பிட்டாசே, இப்ப எதுக்கு சாதம் வடிக்கறே?

ஸ்கூல் புத்தகத்துல லேபிள் ஒட்டறதுக்கு

**

உண்ணாவிரத தொண்டர்கள் மயங்கி விழுந்துட்டாங்களாமே!

ஆமா! உண்ட மயக்கம் தொண்டர்களுக்கும் உண்டு அல்லவா?

**

நீங்க எழுதிட்டு வர க்ரைம் தொடர் பத்தி நீங்களே புகார் தரணுமா? 

ஆமாம் இன்ஸ்பக்டர், உண்மைக் கொலையாளி யார்னு எனக்கு தெரியலை. சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லுங்க. கதையை முடிக்கணும்

**

கொட்டாவி விடறதுன்னா கூட ரோட்டுக்கு வர வேண்டியிருக்கு

ஏன்

பொண்டாட்டி எதிர்ல வாயை திறக்க பயமா இருக்கு

**

கைதிகளுக்கு பிடிக்காத பட்டாசு என்ன?

கம்பி மத்தாப்பு

**

தலைவரே தேர்தல்ல ஜெயிச்சவங்க பட்டாசு விடறாங்க....நாம?

புஸ்வானம் விடலாம்...

**

அந்த டாக்டர் போலின்னு எப்படி கண்டுபிடிச்சே?

ஆபரேஷன் தியேட்டருக்குள்ள நுழைஞ்சதும் புரொஜக்டர் எங்கேன்னு கேட்கறாரே!

**

வேலைக்காரி - அம்மா, எலியை எங்கே கொண்டு விடறது?

பெண் - பக்கத்து தெருவிலே இருக்கிற என் மாமியார் வீட்ல.

**

கமலா - செத்து போன மாமியார் பேயா திரியறாங்கன்னு எதை வைச்சு சொல்றே?

விமலா - மெகா சீரியல் வரும் போது எல்லாம் டிவி தன்னால ஆன் ஆயிடுதே

**

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments