FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனாவுக்குக் கைமுறை வைத்திய மருந்தா? - உலவும் 1914 ஆம் ஆண்டு தமிழ் நூல் பக்கம்!

தமிழில் 1914 ஆம் வெளியிடப்பட்ட கைமுறை வைத்திய நூலொன்றில் கரோனாவுக்கு மருந்து தெரிவிக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் சில பக்கங்கள் வலம் வருகின்றன.

Updated On : 1 ஏப்ரல் 2020, 5:23 pm IST
பகிர்:

தமிழில் 1914 ஆம் வெளியிடப்பட்ட கைமுறை வைத்திய நூலொன்றில் கரோனாவுக்கு மருந்து தெரிவிக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் சில பக்கங்கள் வலம் வருகின்றன.

பாக்கெட் அளவுள்ள இந்த நூலின் 61 ஆம் பக்கத்தில் கோரோன மாத்திரை என்ற பெயரில் இந்த மருந்து பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், போட்டோஷாப்பில் கோரோசன என்ற சொல்லை கோரோன என்று எடிட் செய்யப்பட்டிருக்கிறது.

Advertisement

Advertisement

இந்த மருந்துக்காகச் சேர்க்கப்படும் மருந்துப் பொருள்கள் யாவும் விராகநிடை  என்ற அளவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மிளகு விராகநிடை ஒன்றரை, லவுங்கம் விராகநிடை ஒன்றரை, ஜாதிக்காய் விராகநிடை ஒன்றரை, ஓமம் விராகநிடை ஒன்று, ஜாபத்திரி விராகநிடை ஒன்று, சித்திரமூலம் விராகநிடை ஒன்று, திப்பிலி விராகநிடை ஒன்றரை, கருஞ்சீரகம் விராகநிடை ஒன்று, கோஷ்டம் விராகநிடை ஒன்று, கோரோஜனை விராகநிடை இரண்டு,  நாவல் துளிர் விராகநிடை ஒன்று, மாந்துளிர் விராகநிடை ஒன்று, வேப்பங்கொழுந்து விராகநிடை ஒன்று, பூரம் விராகநிடை ஒன்று.

இவைகளை உலர்த்தி யிடித்து சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து மேற்படி இருவகைகொ.... 

நூலின் முதல் - தலைப்புப் பக்கத்தில் கைமுறை பாக்கெட் வயித்தியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இவை பூ.சு. துளசிங்கமுதலியாரால் ஏட்டுப் பிரதியும் கைமுறையும் அச்சுப் பிரதியுங்கொண்டு ஆய்ந்து யெழுதி முடிவு பெற்று,

பூவிருந்தவல்லி பூ.சு.துளசிங்கமுதலியாரது சுந்...ாச அச்சுக்கூடத்திற்  ....ப்பிக்கப்பட்டது. 1914 - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நூலின் பிரதி யாரிடம் இருக்கிறதெனத் தெரியவில்லை. எனினும், குறிப்பிட்ட இரு பக்கங்கள் வாட்ஸ்ஆப்பில் பகிரப்படுகின்றன.

உள்ளபடியே நூல் இருப்பதும் நூலில் இருக்கும் தகவல்களும் சரியே. ஆனால், கோரோசன, கோரோன ஆக்கப்பட்டதும் அதைக் கொண்டுவந்து கொரோனாவுடன் சேர்த்ததும்தான் கோளாறு!

ம். இப்படியெல்லாம் தமிழுக்குப் பெருமை சேர்க்க முயல வேண்டுமா, என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments