குஜராத்: போர்பந்தரில் நடுக்கடலில் மூழ்கத்துவங்கிய படகிலிருந்து 7 மீனவர்களை கடலோரப் காவல்படையினரின் நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று (டிச.13) போர்பந்தர் கடற்பகுதியில் கரையிலிருந்து 40 கி.மீ தொலைவில் நடுக்கடலில் “ஓம் ஸ்ரீ” எனப் பெயரிடப்பட்ட மீனவப் படகு ஒன்று மூழ்கத்துவங்கியுள்ளது.
இதுகுறித்து, வந்த அவசர அழைப்பினைத் தொடர்ந்து கடலோர காவல் படையினருக்கு சொந்தமான C-161 எனும் கப்பல் மற்றும் கண்கேஷ்வரி எனும் மீனவப் படகும் சென்று நடுக்கடலில் தவித்த 7 மீனவர்களையும் மீட்டனர்.
இதையும் படிக்க: சட்டவிரோதமாக குடியேறிய 2 வங்கதேசத்தினர் கைது!
இந்தச் சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடுக்கடலில் சிக்கித்தவித்த 7 மீனவர்களில் 5 பேர் கண்கேஷ்வரி மீனவப் படகின் மூலமாகவும், 2 பேர் C-161 கப்பலின் மூலமாகவும் மீட்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் மங்குரோல் கடற்கரையில் இறக்கி விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.