தற்போதைய செய்திகள்

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பில்லை: அண்ணாமலை

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

DIN

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தில்லி செல்வதற்கு முன்பு, கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுடன் பேசியதாவது:

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக ஆளும் கட்சியாக இருந்தது. பாஜக 303 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. ஆனால் அன்று அதிமுகவுக்கு வரலாறு காணாத தோல்வி கிடைத்தது.

அதிமுக தனியாக இருந்து ஒரு தொகுதியால் வெற்றிப் பெற இயலவில்லை. எப்படி 30 இடங்கள் கிடைக்கும் என நினைக்கிறார்கள்.

வேலுமணி , எடப்பாடி இடையே உள்கட்சி பூசல் இருப்பதாக தோன்றுகிறது.

பாஜகவுடன் கூட்டணியில் இருந்தால் 30 முதல் 35 இடங்கள் கிடைத்திருக்கும் என்று வேலுமணி கூறுவது உள்கட்சி பூசல்தான்.

திமுகவினர் ஆட்டுகளை வெட்டாமல் என் மீது கை வையுங்கள் . அப்பாவி ஆட்டை துன்புறுத்த வேண்டாம். 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும்.

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்பது நான் பேசுவதிலே தெரியும் என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

SCROLL FOR NEXT