முகப்பு
தற்போதைய செய்திகள்

திருமங்கலத்தில் ரஜினிகாந்த் சிலை! முன்னால் கழுகு சிலை பிரதிஷ்டை! தீவிர ரசிகர் ஆர்வம்

திருமங்கலத்தில் 50 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் ஆன கழுகு சிலை, ரஜினியின் முழு உருவ சிலை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

Updated On : 14 ஜூன் 2024, 2:03 pm IST
பகிர்:

திருமங்கலத்தில் 50 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் ஆன கழுகு சிலை, ரஜினியின் முழு உருவ சிலை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள திருமண தகவல் மையம் தொழில் நடத்தி வரும் கார்த்திக் (50) என்பவர் கடந்த பல வருடங்களாக நடிகர் ரஜினியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, தான் வசிக்கும் வீட்டின் இரண்டு அறைகள் முழுவதும் ரஜினி நடித்த திரைப்படங்களில் உள்ள காட்சிகளையும், அவர் இருக்கும் புகைப்படங்களையும் சுவர் முழுவதும் ஒட்டியுள்ளார்.

Advertisement

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு 250 எடை கொண்ட கருங்கல்லினாலான ரஜினியின் முழு உருவ சிலையை பிரதிஷ்டை செய்து, ரஜினி கோயிலாக வடிவமைத்து நாள்தோறும் ஆறு வகையான அபிஷேகங்கள் செய்து வழிபடுவதுடன், ரஜினியின் பிறந்தநாள் மற்றும் திருமண நாளின் போது அவருக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகிறார்.

இன்று(ஜூன் 14) 50 கிலோ எடை கொண்ட கருங்கல்லினாலான கழுகு -க்கு சிலை செய்து, ரஜினி சிலை முன்பு பிரதிஷ்டை செய்து யாகசால பூஜைகள் நடத்தி, ரஜினி ரசிகரான கார்த்திக் தனது குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார்.

ரஜினிக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், அவருடன் தனது குடும்பம் சந்திக்கும் தருணம் கிடைக்க வேண்டியும் இப்பூஜைகளை நடத்துவதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.